DAE Recruitment 2022 : மும்பை மற்றும் இந்தியா முழுவதும் அணுசக்தி துறையின் பிற பிராந்திய பிரிவுகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி குறித்த கூடுதல் விவரங்கள்


மும்பை மற்றும் இந்தியா முழுவதும் அணுசக்தி துறையின் பிற பிராந்திய  பிரிவுகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியாகியுள்ளது. இதில் 70 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை அறிந்து கொள்ள https://dpsdae.formflix.in/notification.php இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.


பதவியின் பெயர்




இளநிலை கொள்முதல் உதவியாளர் ( Junior Purchase Assitant )

 

இளநிலை சரக்கக காப்பாளர் ( Junior Storekeeper )

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:


நவம்பர் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://dpsdae.formflix.in/



காலி இடங்கள்

 

மும்பை மற்றும் இந்தியா முழுவதும் அணுசக்தி துறையின் பிற பிராந்திய அலகுகளில் 70 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளநிலை கொள்முதல் உதவியாளர் ( Junior Purchase Assitant )  மற்றும் இளநிலை சரக்கக காப்பாளர் ( Junior Storekeeper )பதவிகளுக்கு மொத்தம் 70 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இடஒதுக்கீடு

 

இளநிலை கொள்முதல் உதவியாளர் ( Junior Purchase Assitant )  மற்றும் இளநிலை சரக்கக காப்பாளர் ( Junior Storekeeper )பதவிகளுக்கு மொத்தம் 70 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் SC பிரிவினருக்கு 23 இடங்களும், OBC பிரிவினருக்கு 12 இடங்களும், EWS பிரிவினருக்கு 22 இடங்களும், UR பிரிவினருக்கு 13 இடங்களும் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


கல்வித்தகுதி


இந்த மேற்கண்ட பணிகளுக்கு கல்விதகுதியானது, அறிவியல் மற்றும் வணிகவியலை முதன்மை பாடமாக கொண்டு degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், CSE, E.E.E, B.E படிப்பில் 60 சதவீகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://dpsdae.formflix.in/notification.phpஇந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.


வருமானம்


இந்த மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு வருமானமானது ரூ. 25,500 - 81,100 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது


இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும் https://dpsdae.formflix.in/notification.php


தேர்வு செய்யப்படும் முறை


இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். எழுதுத் தேர்வில் தகுதியுடையவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில்  | DAE Recruitment 2022 | https://dpsdae.formflix.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • home page- ல் apply here என்பதை கிளிக் செய்யவும்.

  • முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும் 

  • ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்.

  • புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.

  •  அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

  • மேலும் விவரங்களுக்கு https://dpsdae.formflix.in/notification.php என்ற இணையதளத்திற்கு செல்லவும்.