துத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சி.பி.சி.எல்.) நிறுவனத்தில் காலியாக உள்ள 75 பொறியாளர் மற்றும் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று காணலாம். இதற்கு இந்த வார இறுதிக்குள் விண்ணப்பிக்கவும்.


பணி விவரம்




கல்வித் தகுதி:


ஜூனியர் / ஜூனியர் பொறியாளர் பணிக்கு கெமிக்கல், பெட்ரோலியம், பெட்ரோகெமிக்கல் ஆகிய துறைகளில் மூன்றாண்டு கால டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதே துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.


ஜூனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10-வத், 12-வது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


மாத ஊதியமாக  ரூ. 25,000- ரூ.1,05,000/- வழங்கப்படும்..


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 26 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:


பட்டியலின / பழங்குடியின / முன்னாள் ராணுவ வீரர் ஆகியோர் தவிர்த்து மற்ற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.


தெரிவு செய்யப்படும் முறை:


இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, Proficiency/Physical Test, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.


விண்ணப்பிப்பது எப்படி?


https://cpcl-ne24.onlineregistrationform.org/TNCPCL/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணபிக்க கடைசி தேதி - 26.02.2024


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cpcl.co.in/wp-content/uploads/2024/02/Advertisment-Workmen-2024-Detailed-Final-Version.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.


குடிநீர் வழங்கல் துறையில் வேலை


தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 1933 -லிருந்து 2104  உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   


நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் உள்ள பணியிடங்களுக்கு என்னென்ன தகுதிகள் என்று காணலாம். 




பணி விவரம்



  • உதவிப்பொறியாளர் (மாநகராட்சி) -194

  • உதவிப்பொறியாளர் (சிவில் / மெக்கானிக்கல்) -145

  • உதவிப்பொறியாளர் (நகராட்சி)- 80

  • உதவிப்பொறியாளர் (சிவில்) -58

  • உதவிப்பொறியாளர் (மெக்கானிக்கல்) -14

  • உதவிப்பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) -71

  • உதவிப்பொறியாளர் (திட்டம் மாநகராட்சி) - 156

  • நகரமைப்பு அலுவலர் (நிலை 12) - 12

  • இளநிலை பொறியாளர் - 24

  • தொழில்நுட்ப உதவியாளர் - 257

  • வரைவாளர் (மாநகராட்சி) -46

  • வரைவாளர் (நகராட்சி) -130

  • பணி மேற்பார்வையாளர் -92

  • நகரமைப்பு ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்) -102

  • பணி ஆய்வாளர் - 367

  • துப்புரவு ஆய்வாளர் -356


மொத்த பணியிடங்கள் - 2104


ஊதிய விவரம்






தெரிவு செய்யப்படும் முறை


இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை


http://www.tnmaws.ucanapply.com/ - என்ற  இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பிற்கா கல்வி உள்ளிட்ட் பிற தகுதிகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டும். 


எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்




முக்கிய நாட்கள்




விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.03.2024


விண்ணப்பதார்கள் விவரங்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044 - 29864451 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது application.maws@tn.gov.in - என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிந்துகொள்ளலாம்.