இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) காலியாக உள்ள (General Duty) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் Group ‘A’ Gazetted Officer 70 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணி விவரம்
ஜெனரல் டியூட்டி (General Duty GD) - 50
டெக்னிக்கல் பொறியாளர் (பொறியாளர் / எலக்ட்ரிக்கல் ) - 70
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க 10+2+3 என்ற முறையில் படித்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப பிரிவிற்கு விண்ணப்பிக்க மெக்கானிக்கல், எலக்ட்ராக்னிக்ஸ், எலக்ட்ரிக்ஸ் துறையில் பொறியியல் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இந்தப் பணிகளுக்கு Group ‘A’ Gazetted Officer -இன் படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை:
இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு,மருத்துவத் தேர்வு, Computerised Cognitive Battery Test (CCBT) and Picture Perception & Discussion Test (PP&DT) சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ரூ.300- ஐ செலுத்த வேண்டும். பட்டியலின , பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://joinindiancoastguard.cdac.in/cgept/- என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள -
https://cgept.cdac.in/icgreg/candidate/login - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.03.2024 மாலை 5.30 மணி வரை
அறிவிப்பின் முழு விவரத்திற்கு - https://joinindiancoastguard.cdac.in/cgcat/assets/img/news/Advertisement_for_Asst_Comdt_2025_Batch.pdf - என்ற லிங்கை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட பொதுவான காரணங்கள் பற்றிய அறிந்துகொள்ள https://joinindiancoastguard.cdac.in/cgept/downloads/commonReasonForRejection - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..