மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1149 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு 49 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற மார்ச் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.


 இந்தியாவின் முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை தான் மத்திய தொழிற்பாதுகாப்பு படை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், முன்னதாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2800 படை வீரர்களுடன், மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 1983 ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தும் உரிமை இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டது.





மேலும் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்றவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் சிஐஎஸ்எப்யில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


CISF யில் கான்ஸ்டபிள் பணிக்கானத் தகுதிகள்:


மொத்த காலிப்பணியிடங்கள் – 1149


மாநிலம் வாரியாக காலிப்பணியிட விபரங்கள்:


தமிழ்நாடு -49


பீகார் – 123


உத்தரப்பிரதேசம் – 112


அசாம் – 103


ஜார்க்கண்ட் – 87


ஆந்திரா- 79


மஹாராஷ்டிரா- 70


ஒடிசா – 58


மேற்கு வங்கம் – 54


ஜம்மு காஷ்மீர் -41


கல்வித்தகுதி:


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், அறிவியல் பாடங்களுடன் கூடிய பிரிவில் பன்னிரெண்டாம்  வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.


இதர தகுதிகள்:


உயரம்- விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்ச உயரம் 170 செமீ ஆக இருக்க வேண்டும்.


மார்பளவு – சாதாரண நிலையில் 80 செமீ, மார்பு விரிவடைந்த நிலையில் 85 செமீ ஆக இருக்க வேண்டும்.


வயது வரம்பு :


விண்ணப்பதாரர்கள் 4.3.2022 ஆம் தேதியின் படி 18 வயது முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், www.cisfrectt.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற மார்ச் 4 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம் – ரூபாய் 100


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில தகுதியானவர்கள தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, https://www.cisfrectt.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.