மத்திய பட்டு வாரியயத்தில் (Central Silk Board Recruitment) காலியாக உள்ள குரூப் A, B, and C ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 142 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளங்கலை, முதுகலை ஆகிய கல்வித் தகுதிகள் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய முழு விவரத்தை கீழே காணலாம்.
பணி விவரம் :
Group AAssistant Director (Administration & Accounts) Group BComputer Programmer Assistant Superintendent (Administration) Assistant Superintendents (Technical) Stenographer (Grade-I) Library and Information AssistantJunior Engineer Junior Translator (Hindi) Group CUpper Division Clerk Stenographer (Grade-II) Field Assistant Cook
கல்வித் தகுதி:
குரூப் ஏ பிரிவு பணிக்கு பட்டய கணக்கர் படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன், வணிகவியல் ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
குரூப் பி பிரிவு பணிக்கு குறைந்தபட்சம் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
ஸ்டேனோகிராபர் பணிக்கு தேவையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பாளர் பணிக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்.
குரூப் சி பிரிவு பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- Assistant Director (Administration & Accounts) -Pay Level -10 ரூ.56,100 – 17,7500/-
- Computer Programmer - Pay Level -7 ரூ.44,900 – 1,42,400/-
- Assistant Superintendent (Administration)- Pay Level -6 ரூ.35,400 – 1,12,400/-
- Assistant Superintendents (Technical)- Pay Level -6 -ரூ.35,400 – 1,12,400/-
- Stenographer (Grade-I)- Pay Level -6 ரூ.35,400 – 1,12,400/-
- Library and Information Assistant Pay Level -6 - ரூ.35,400 – 1,12,400/-
- Junior Engineer - Pay Level -6 -ரூ.35,400 – 1,12,400/-
- Junior Translator (Hindi)- Pay Level -6 - ரூ.35,400 – 1,12,400/-
- Upper Division Clerk -Pay Level – 4 ரூ.25,500 – 81,100/-
- Stenographer (Grade-II)- Pay Level – 4 - ரூ..25,500 – 81,100/-
- Field Assistant -Pay Level – 3- ரூ.21,700 – 69,100/-
- சமையலர் - Pay Level – 2 - ரூ.19,900 – 63,200/-
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இது தொடர்பான முழு விவரத்தை அறிவிப்பில் தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணச் சலுகை குறித்த விவரத்தினை அறிவிப்பில் தெரிந்துகொள்ளவும்.
எப்படி விண்ணப்பிப்பது:
www.csb.gov.in - என்ற இணையத முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் திறனறிவு தேர்வு , நேர்காணல் மூலம் இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.01.2023
அறிவிப்பின் முழு விவரத்தை https://drive.google.com/file/d/1mIkVCIR_6nXD2g36MfznSJylY9pFByoZ/view-என்ற லிங்கில் தெரிந்துகொள்ளவும்.