நாட்டின் பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங் ஆஃப் இந்தியா (Central Bank of India) வங்கியில் காலியாக உள்ள 3,000 தொழில்பழகுநர் (apprentices) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி (06.03.2024) தேதியாகும்.
பணி விவரம்
தொழில்பழகுநர் பணி - 3000
கல்வித் தகுதி
மேற்கண்ட பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற் தகுதி சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.
பணி இடம்
இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
வயது வரம்பு
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 01.04.1996 முதல் 31.03.2004 -க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை
விண்ணப்பிப்பது எப்படி?
www.nats.education.gov.in - என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:'
இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதில் தகுதி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.
ஆன்லைன் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும். ஆன்லைன் தேர்வு தொடர்பாக விவரங்கள் சென்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி காலம்
இந்தப் பணி ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலானது. , பணிதிறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் வரை பணிக்கால ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.03.2024
உத்தேசிக்கப்பட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 10.03.2024
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://www.centralbankofindia.co.in/sites/default/files/Notification-Engagement-of-Apprentices-2024-25.pdf - என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.