கோயம்புத்தூரில் உள்ள மாநில வன சேவைக்கான மத்திய அகாடமி (Central Academy for State Forest Service) நிறுனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 


பணி விவரம்:


ஆய்வக உதவியாளர் (Laboratory Attendants (Technical))


கார் ஓட்டுநர் (Staff Car Drivers (Ordinary Grade))


கல்வி மற்றும் பிற தகுதிகள்


ஆய்வக உதவியாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


கார் ஓட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும்.


மோட்டர் மெக்கானிசம் தெரிந்திருக்க வேண்டும். 


இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் மூன்றாண்டு பணி அனுபவம் இருப்பவராக இருந்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். 


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 10.06.2023 -ன் படி 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்த முழு விவரத்தை அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம். 


தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு எழுத்துத் தேர்வ் அடிப்படையில் தகுதியாவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்ப கட்டணம்:


ஆய்வக உதவியாளார் மற்றும் கார் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க தேர்வு கட்டணமாக ரூ.250-வும் ப்ராசசிங் கட்டணம் ரூ.500-வும் மொத்தமாக ரூ.750 செலுத்த வேண்டும். 


பழங்குடி/ பட்டியலின  பிரிவினர், மகளிர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு எழுத்துத் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ப்ராசரிங் கட்டணம் ரூ.500 மட்டும் செலுத்த வேண்டும். 


தேர்வு மையங்கள்:


இதற்கு கோயம்புத்தூர், டேராடூன், அசாம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கவனிக்க:
 




எழுத்துத் தேர்வு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்படும். 


கார் ஓட்டுநர் பதவிக்கு ஸ்கில் டெஸ்ட் நடத்தப்படும். 




இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.casfosexam.in/casfos/assets/pdf/DetailedAdvertisment.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2023