இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இஞ்சினியரிங் கன்சல்டண்ட் இந்தியா நிறுவனத்தில் (Broadcast Engineering Consultants India Limited (BECIL) ) ஆய்வக உதவியாளார், ஆப்ரேசன் தியேட்டர் உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

இந்த நிறுவனம் உலக அளவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.

பணியிடம்:

புது டெல்லி, ஜஜார் (Delhi/NCR/Jhajjar.) உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுவர்.

பணி விவரம்:

MTS (Female) – 10ஆய்வக உதவியாளர் (Lab Technicians) – 2Operation Theatre Assistant – 3

இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

MTS (Female): பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். மருத்துவமனையில் குறைந்தப்பட்சம் ஆறு மாத காலம் பணியாற்றிய பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர் பணிகளுக்கு இளங்கலை Medical Lab Technology அல்லது அதற்கு தொடர்பான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஆப்ரேசன் தியேட்டர் உதவியாளர் (Operation Theatre Assistant) பணிக்கு பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  தனியார் அல்லது அரசு மருத்துவமனைகளில் O.T. , ICU,  CSSD ஆகியவற்றில் 500 பெட்கள் உடன் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி குறித்து விரிவாக தெரிந்து கொள்ள https://www.becil.com/uploads/vacancy/208Jhajjarpdf-ccea30b5b9b2a568fd22857e782893d4.pdf

ஊதிய விவரம்:

இந்தப் பணிகளுக்கு ரூ.16,614 முதல்  ரூ.20,202 வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. பணிக்கு தகுந்தாற்போல ஊதியம் வழங்கப்படும்.

MTS (Female) – ரூ.16,614Lab Technicians – ரூ.21,970Operation Theatre Assistant – ரூ.20,202

வயதுவரம்பு:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது:

இந்தப் பணிக்கு  www.becil.com அல்லது  https://becilregistration.com என்ற லிங்கை கிளிக் செய்ய பாஸ்போர்ட் ஃபோட்டோ, கையெழுத்து, தேவையான சான்றிதழ்களை அப்லோட் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 

விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும்போது ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டால் khuswindersingh@becil.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் தொடர்ப்பு -sanyogita@becil.com

0120-4177860

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED(A Government of India Enterprise under Ministry of Information & Broadcasting)(A Mini Ratna Company)Head Office: 14-B, Ring Road,

I.P. Estate, New Delhi-110002,

Phone: 011-23378823

Corporate Office:

BECIL Bhawan, C-56/A-17,

Sector-62, Noida-201307Phone: 0120-4177850 / 4177860 

அதிகாரப்பூர்வ  வலைதள முகவரி : www.becil.com

விண்ணப்பிக்க கடைசி தேதி- 27.10.2022

கூடுதல் தகவலுக்கு அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://www.becil.com/uploads/vacancy/208Jhajjarpdf-ccea30b5b9b2a568fd22857e782893d4.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்யவும்.

விருப்பமுள்ளவர்கள் https://becilregistration.in/என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.