சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பாரத் எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (Bharat Electronics Limited) காலியாக உள்ள மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் திட்டப்பொறியாளர் (Project Engineer-I ) மற்றும் பயிற்சி பொறியாளர் (Trainee Engineer) பிரிவில் 34 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

திட்டப்பொறியாளர் - எலக்ட்ரானிக்ஸ் பிரிவு (Project Engineer-I (Electronics) ) - 7

திட்டப்பொறியாளர் - எலக்ட்ரானிக்ஸ்பிரிவு (Project Engineer-I (Electronics) ) -5

பயிற்சி பொறியாளர் - எலக்ட்ரானிக்ஸ் பிரிவி (Trainee Engineer-I (Electronics)) – 12

பயிற்சி பொறியாளர் - மெக்கானிக்கல்  பிரிவு (Trainee Engineer-I (Mechanical)) – 6

பயிற்சி பொறியாளர் - கணினி அறிவியல் பிரிவு  -(Trainee Engineer-I (Computer Science)) – 3

பயிர்சி பொறியாளர்- சிவில் பிரிவு (Trainee Engineer-I (Civil)) – 1

கல்வித் தகுதி:

இந்தப் பணிகளுக்கு சம்பந்தப்பட்டதுறையில் பி.இ. பொறியியல் அல்லது பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

பயிற்சி பொறியாளர் (Trainee Engineer)-I (எலக்ட்ரானிக்ஸ்):

 விண்ணப்பதாரர் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் துறையில் BE/B.Tech/B.Sc  மற்றும் ஓராண்டு பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 ப்ராஜெக்ட் இன்ஜினியர்-I (எலக்ட்ரானிக்ஸ்) (Project Engineer): 

 விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் BE/B.Tech/B.Sc Engg மற்றும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

 விண்ணப்பக் கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ’SBI Collect’ மூலம் ஆன்லைன் வழியாக அல்லது எஸ்.பி.ஐ.  கிளை மூலமாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.

 

ப்ராஜெக்ட் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ. 400 (18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உடன் ரூ.472) பயிற்சி பொறியாளர் -I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுகள் ரூ. 150 (18 சதவீத ஜி.எஸ்.டி. வரி உடன் ரூ.177 ) கட்டணமாக செலுத்த வேண்டும்.

வயது வரம்பு:

திட்டப்பொறியாளர் பணிக்கு 32 வயதுக்கு மிகாமலும், பயிற்சி பொறியாளர் பணிக்கு 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

திட்டப்பொறியாளர்-I: முதல் ஆண்டு மாத ஊதியமாக ரூ.40,000/ இரண்டாம் ஆண்டு ரூ.45,000/ மூன்றாம்  ஆண்டு ரூ.50,000 / நான்காம் ஆண்டு ரூ.55,000 

பயிற்சி பொறியாளர்-I: முதல் ஆண்டு மாத ஊதியம் ரூ. 30,000/ இரண்டாம் ஆண்டு ரூ.35,000 / மூன்றாம் ஆண்டு ரூ.40,000

எப்படி விண்ணப்பிப்பது?

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://bel-india.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 முகவரி:

BHARAT ELECTRONICS LIMITEDNANDAMBAKKAM, CHENNAI – 600 089

விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.10.2022

அறிக்கையின் முழு விவரம் அறிய https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=PE%20TE%20WEB%20AD%202022%20ENGLISH%20-12-10-22.pdf

என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு பக்கம் https://www.bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements

விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய https://jobapply.in/bel2022Chennai/என்ற லிங்கை கிளிக் செய்யவும்.