மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் பொறியாளர் பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வர்கள் இதற்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் புரொபேஷனரி பொறியாளர் பணியிடங்களில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது.
என்ன பணி இடங்கள்? எவ்வளவு?
புரொபேஷனரி பொறியாளர் (எலக்ட்ரானிக்ஸ்)- 200புரொபேஷனரி பொறியாளர் (மெக்கானிக்கல்) - 150மொத்தம் - 350.
ஊதியம்
அடிப்படை ஊதியம் மாதத்துக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை
அடிப்படை ஊதியத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் DA, HRA, போக்குவரத்து உதவித்தொகை, செயல்திறன் தொடர்பான ஊதியம், மருத்துவம், திருப்பிச் செலுத்துதல் மற்றும் அனுமதிக்கப்படும் பிற சலுகைகளைக் கூடுதலாகப் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
B.E / B.Tech / B.Sc பட்டதாரிகள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
அதிகபட்சம் 25 வயது (பொதுப் பிரிவினருக்கு), இதில் தளர்வுகளும் உண்டு.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினருக்கு - ரூ.1000, ஜிஎஸ்டி ரூ.180 சேர்த்து, ரூ.1,180 செலுத்த வேண்டியது முக்கியம்.
தேர்வு முறை
- கணினி வழியில் தேர்வு
- நேர்காணல்
விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் https://test.cbexams.com/EDPSU/BEL/Apps/Registration/RegStep.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
- அதில், புதிதாக முன்பதிவு என்று குறிப்பிட்டு உள்ளே செல்ல வேண்டும்.
- அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு சரியான விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
விண்ணப்ப அறிவிக்கை குறித்து முழுமையாக அறிய https://bel-india.in/wp-content/uploads/2025/01/All-India-External-Ad_EN.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://bel-india.in/