மத்திய அரசின் நவரத்தினா நிறுவனங்களுக்கு கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள பணியிடத்திற்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி.(28.10.2023). விருப்பம் உள்ளவர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்க வேண்டாம்.


பணி விவரம்


பொறியாளர்


மனிதவள மேம்பாட்டு அதிகாரி


அக்கவுண்ட்ஸ் அதிகாரி


இந்தப் பணியிடங்கள் Probationary பதவிகளுக்கானது. 


மொத்தப் பணியிடங்கள் - 232


கல்வித் தகுதி


பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க எலக்ட்ரானிஸ் அண்ட் கம்யூனிகேசன் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.டெ. பி.எஸ். படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


மெக்கானிக்கல், கம்யூட்டர் சயின்ஸ் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


மனிதவள மேம்பாட்டு அதிகாரி பணியிடத்திற்கு எம்.பி.ஏ. எம்.எஸ்.டபுள்யு., Human Resources துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


அக்கவுண்டஸ் பணியிடத்திற்கு CA, CMA படித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு


பொறியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 01.09.2023-ன் படி 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


அக்கவுண்ட்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


Probationary Engineer E-II - ரூ.40,000 - 3% - ரூ.1,40,000


Probationary Officer HR -E-II -  ரூ.40,000 - 3% - ரூ.1,40,000


Probationary Accounts Officer E-II -  ரூ.40,000 - 3% - ரூ.1,40,000


பணியிட விவரம்


எலக்ட்ரானிக்ஸ் - 124


மெக்கானிக்கல்- 63


கம்யூட்டர் சயின்ஸ் - 18


மனிதவள மேம்பாட்டு அதிகாரி - 12


நிதி நிர்வாகம் - 15


இதற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பெங்களூரு, காஸியாபாத், புனே, ஐதராபாத், சென்னை, மச்சிலிப்பட்டினம், பஞ்சுக்லா, கோட்வாரா, நவி மும்பை உள்ளிட்ட அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர். 


விண்ணப்ப கட்டணம்


பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், முன்னாள் பொதுப்பணி துறை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


மற்ற பிரிவினருக்கு ஜி.எஸ்.டி. உடன் ரூ.1,180 விண்ணப்ப கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை


ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் இதற்கு தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிப்பது எப்படி?


https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/84142/Index.html - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், விண்ணப்ப கட்டணம் விவரத்தை டவுன்லோட் செய்து வைத்து கொள்ளலாம். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.10.2023


https://bel-india.in/Documentviews.aspx?fileName=BEL%20Web%20Ad%20English-03-09-23.pdf -என்ற இணைப்பில் வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.