பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 517 பயிற்சிப் பொறியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 13-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BEL நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பயிற்சிப் பொறியாளர் வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இன்ஜினியரிங் பட்டதாரிகள் இப்பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்
பணி விவரம்
பயிற்சி பணியாளர்
மொத்த பணியிடங்கள் - 517
பணி இடம்:
பெல் நிறுவனத்தின் மத்திய, கிழக்கு, வடக்கு உள்ளிட்ட மண்டலங்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர் பணிக்கு அமர்த்தப்படுவர்.
தெற்கு மண்டலம் - ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் 131 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி:
பயிற்சி பொறியாளர் (Trainee Engineer)-I (எலக்ட்ரானிக்ஸ்):
விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்டப் பொறியியல் துறையில் BE/B.Tech/B.Sc Eng மற்றும் 1 ஆண்டு பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ப்ராஜெக்ட் இன்ஜினியர்-I (எலக்ட்ரானிக்ஸ்) (Project Engineer): BHEL நிறுவனப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் BE/B.Tech/B.Sc Engg மற்றும் 2 ஆண்டு பணி முன்அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SBI Collect மூலம் ஆன்லைன் வழியாக அல்லது எஸ்பிஐ கிளை மூலமாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பயிற்சி பொறியாளர் – I க்கு விண்ணப்பிக்க ரூ. 150/- செலுத்த வேண்டும். மேலும் PWD/SC/ST விண்ணப்பதாரர்களுக்கு எந்தவித விண்ணப்பக்கட்டணம் இல்லை.
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://bel-india.in/ என்ற இணையப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfWbNC9vtwJ_Y2-RXsz4Pqb83Mh-q3quYiG2TaXFsJL8cNxRQ/viewform - என்ற கூகுள் ஃபார்ம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
அதில் தேர்வாகும் நபர்கள் மட்டும் பணி அமர்த்தப்படுவார்கள். இரண்டாண்டு கால பயிற்சி காலம் ஆகும். திறமை அடிப்படையில் நீட்டிக்கபடலாம்.
ஊதிய விவரம்
பயிற்சி பொறியாளர்-I (Trainee Engineer)
முதலாமாண்டு - ரூ.30,000/-
இரண்டாம் ஆண்டு - ரு.35,000/-
மூன்றாம் ஆண்டு - ரூ.40,000/-
இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://bel-india.in/Documentviews.aspx?fileName=Final%20TE%20Web%20Advt%2028022024%20HLS%20and%20SCB-27-02-24.pdf -- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.03.2024