மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர், டெக்னீசியன் க்ரேட் சி , உதவியாளர் ஆகிய இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
- உதவி பொறியாளர் (Trainee)
- டெக்னீசியன் சி
- அலுவலக உதவியாளர் - கம்யூட்டர் ஆப்ரேட்டர் சி
கல்வித் தகுதி:
- எலக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில், பல்கலைக்கழக மானியக் குழு அல்லது AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- டெக்னீசியன் சி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, ஐ.டி.ஐ. தேர்ச்சி ஓராண்டுகால தொழில் பழகுநர் பயிற்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பி.காம் / பி.பி.ஏ. படித்திருக்க வேண்டும். அதோடு, கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும் அரசு விதிமுறைகளின் படி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வயதுகளில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதிய விவரம்:
- உதவி பொறியாளர் (Trainee) - ரூ.24.500/- - ரூ.90,000 வரை
- டெக்னீசியன் சி ரூ.21,500 - ரூ.82,000
- அலுவலக உதவியாளர் - கம்யூட்டர் ஆப்பரேட்டர் சி ரூ.21,500 - ரூ.82,000
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, ட்ரேட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர் https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும்போது 10- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டம் பெற்றதற்கான சான்றிதழ், புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.295/- (ஜி.எஸ்.டி. தொகையுடன்) விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பட்டியலின பிரிவினர் / பொதுப்பணி துறையினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழு விவரத்திற்கு https://bel-india.in/Documentviews.aspx?fileName=NON%20EX%20WEB%20AD%20-%20ENGLISH-19-07-2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.08.2023