டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமியில் பல்வேறு டெக்னிக்கல் படிப்புக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் உடனடியாக இந்திய ராணுவப்பணிக்கு விண்ணப்பித்துக்கொள்ளவும்.
இந்திய ராணுவ அதிகாரிகளுக்குப்பயிற்சி வழங்கும் நிறுவனமாக இந்தியப்படைத்துறை கல்விக்கூடம் இயங்கிவருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரத்தில் கடந்த 1932 ஆம் ஆண்டு 1400 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்ட இந்தியன் மிலிட்டரி அகாடமியில் ராணுவப்பயிற்சி கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது இந்த இராணுவ அகாடமியில் ஆண்டிற்கு 1,650 மாணவப்படையினர் இராணுவப் பயிற்சி பெறுகின்றனர். இங்கு பயிற்சி முடித்தவர்களுக்கு இந்திய இராணுவத்தின் தரைப்படையில் லெப்டினன்ட் எனும் இராணுவ அதிகாரி பதவி வழங்கப்படுகிறது. இதோடு மட்டுமின்றி இந்தியன் மிலிட்டரி அகாடமியில் பல்வேறு டெக்னிக்கல் பிரிவின் கீழும் பணியிடங்கள் நிரப்பபடுவதற்கான அறிவிப்பு வெளியாகும். அதன்படி தற்போது இன்ஜினியரிங் பிரிவில் தேர்ச்சிப்பெற்றவர்கள் இந்திய அகாடமியில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு வெளியாகியுள்ளது.
எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க யார் தகுதியுடையவர்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
இந்திய மிலிட்டரி அகாடமியில் பல்வேறு பணியிடங்களுக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 40
துறைவாரியான விபரங்கள்
சிவில் மற்றும் கட்டுமானத் தொழில்நுட்பம் – 9
ஆர்க்கிடெக்சர்- 1
EEE -3
ECE- 2
டெலி கம்யூனிகேசன் – 18
ஏரோநாட்டிக்கல் – 1
கம்யூட்டர் சயின்ஸ் – 8
ஐ.டி – 3
எலக்ட்ரானிக்ஸ்- 1
இன்ஸ்ட்ருமென்டேசன் -1
ஆட்மோ எலக்ட்ரானிக்ஸ் – 1
ஆட்டோ மொபைல் -1
கல்வித்தகுதி :
இந்தியன் மிலிட்டர் அகாடமில் டெக்னிக்கல் பிரிவில் பணியாற்ற விரும்பும் நபர்கள், மேற்கூறப்பட்டுள்ள ஏதேனும் ஒரு துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 01.07.2022 ஆம் தேதியின் படி, 02.07.1995 முதல் 01.07.2002 க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள், இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://joinindianarmy.nic.in என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைனில் வருகின்ற ஜனவரி 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
இந்தியன் மிலிட்டரி அகாடமி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், கட்- ஆப் மதிப்பெண் மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட தகுதியும், இந்திய ராணுவத்தில் ஏதாவது ஒரு பிரிவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் உள்ள இந்தியாவைச்சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப்பயன்பெறுங்கள்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை http://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.