ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Specialist cadre officer (SCO) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் வருகின்ற பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


நாட்டின் அதிகமான வாடிக்கையாளர்களைக்கொண்ட மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கி மக்களை கவரும் விதமாகவும் வாடிக்கையாளர்களை தங்கள் வசம் வைத்துக்கொள்ளவும் அவ்வப்போது பல்வேறு சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. நாடு முழுவதும் பல கிளைகளுடன் செயல்பட்டுவரும் இவ்வங்கியில் பல்வேறு துறைகளில் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. Specialist cadre officer  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருந்தாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வயது வரம்பு? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.





SBI யில் Specialist cadre officer பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 48


கல்வித்தகுதி :


  எஸ்.பிஐ வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளங்கலைப்பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு: விண்ணப்பத்தாரர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமுள்ள உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம்   விண்ணப்பிக்க வேண்டும்.


முதலில் https://ibpsonline.ibps.in/sbiscorjan22/ என்ற இணையதளப் பக்கத்தின் வாயிலாக விண்ணப்பதாரர்கள் ரிஜிஸ்டர் செய்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் வங்கிப்பணிக்காக கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் எந்த தவறு இல்லாமல் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.


முன்னதாக விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கல்விச்சான்றிதழ், சமீபத்திய புகைப்படம், சுய விண்ணப்பம்,  பணி முன் அனுபவம் குறித்த அனைத்துச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து வைத்துக்கொளள வேண்டும்


விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு முன்னதாக உங்களது  அனைத்து விபரங்களும் சரியாக உள்ளதா? என்பதை ஒரு முறை சரிப்பார்த்துக்கொள்வது அவசியமான ஒன்று.


விண்ணப்பக்கட்டணம்:


UR/OBC பிரிவினருக்கு ரூ.750 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


SC/ST/PWD பிரிவினருக்கு எந்தவித விண்ணப்பக்கட்டணமும் இல்லை.


தேர்வு முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஆன்லைன் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.. பின்னர் ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறும்  நபர்கள் மட்டும் நேர்காணல் தேர்வில் பங்கேற்க முடியும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


சம்பளம் :


தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 36 ஆயிரம் முதல் ரூபாய் 63 ஆயிரத்து 840 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


எனவே ஆர்வமுள்ள இளங்கலை பட்டப்பட்டப்படிப்பு முடித்துள்ள பட்டதாரிகள் இந்த அரியவாய்ப்பை தவறாமல் பயன்படுத்துக்கொள்ளுங்கள். இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கியில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.


மேலும் இந்த  வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://sbi.co.in/documents/77530/11154687/04022022_SCO_26_Asst.Mgr1.%28NetwSecuSpl.%29+2.%28RoutSwit%29.pdf/a3c9bf01-ab35-d47e-684b-8c04b6b13d4a?t=1643982749841 என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளவும்.