50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களுடம் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு,   புதிய, புதிய நிறுவனங்கள் சென்னையில் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் தொழிற்நிறுவனங்களை தொடங்கி வருகிறது. இதன் காரணமாக வேலைவாய்ப்பை ஒரே இடத்தில் குவிந்து கிடக்காமல் பரவலாக்கப்பட்டு வருகிறது. இதனால் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. 

Continues below advertisement

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம்

அந்த வகையில் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி மயிலாடுதுறை, ராமநாதபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 50ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்துகிறது.

நாள் : 20.12.2025 சனிக்கிழமைநேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 3:00 மணி வரைஇடம் : நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பொறையார்அனுமதி இலவசம்

Continues below advertisement

சிறப்பு அம்சங்கள்100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்சுயதொழில் முனைவோருக்கான கடனுதவி திட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள்இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்

கல்வித்தகுதிகள்8th 10th 12th, ITI, DIPLOMA ANY DEGREE, NURSING, BEமேலும் விவரங்களுக்குமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மயிலாடுதுறை மாவட்டம்.தொடர்புக்கு: 04364 299 790

அரியலூர் வேலைவாய்ப்பு முகாம்

இதே போல அரியலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்துகிறது.நாள் : 20.12.2025 சனிக்கிழமைநேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 3:00 மணி வரை இடம் : அரசு மாதிரி (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளி, செந்துறை.அனுமதி இலவசம்

சிறப்பு அம்சங்கள்100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

கல்வித்தகுதிகள்ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு (தேர்ச்சி / தோல்வி) ITI, Any Diploma, Any Degree, B.A., B.Sc BBA., BCA., B.Com., MBA., M.A., M.Sc., M.Com., B.e., B.Tech., Agri, Nursing, Paramedical, Hotel Management.மாத ஊதியம்: 10,000/- முதல் 45,000/-வயது 18 முதல் 40 வரைமேலும் விவரங்களுக்குமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அரியலூர் மாவட்டம்.தொடர்புக்கு: 9499055914

 

 

ராமநாதபுரம் -வேலைவாய்ப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்துகிறது.நாள் : 20.12.2025 சனிக்கிழமைநேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 3:00 மணி வரைஇடம் : அரசு கலைக்கல்லூரி, மதுரை-மண்டபம் ரோடு, அரசு ஐ.டி.ஐ அருகில், பரமக்குடிஅனுமதி இலவசம்

சிறப்பு அம்சங்கள்100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்10,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான (OMCL) பதிவிற்கு வழிகாட்டுதல்

கல்வித்தகுதிகள்8th 10th 12th, ITI, DIPLOMA ANY DEGREE, NURSING,BEவயது 18 முதல் 40 வரைமேலும் விவரங்களுக்குமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இராமநாதபுரம் மாவட்டம்.