அண்ணா பல்கலைக்கத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில்  (Centre for Climate change and Disaster management) தொடங்கப்பட்டுள்ள திட்டத்தில் பணிபுரிவதற்கான Project Scientist, Project Associate தற்காலிக பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 5 - ஆம் தேதி கடைசி நாள். இந்த திட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் பணி புரியலாம்.

பணி விவரம்:

Project Scientist -Coastal Ecosystem

Project Scientist -Urban Habitat

Project Scientist-Geospatial Technology

Project Associate II -Urban Habitat

Project Associate II -Geospatial Technology.

Project Associate

பல்கலைக்கழக பணிக்கான கல்வித் தகுதி:

Project Scientist பணிக்கு பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட துறைகளில் சம்பந்தப்பட்ட துறையில் Ph.D அல்லது M.E/M.Tech/M.Sc ஆகியவை படித்திருக்க வேண்டும். நான்காண்டுகள் ஆய்வு படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Project Associate II பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில்  M.E , M.Tech, M.Sc ஏதாவது ஒரு முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Assistant பணிக்கு  B.Com அல்லது BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப் செய்யவும், டேட்டா என்ரி செய்வதிலும் புலமை பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

Project Scientist  - ரூ.60,000 Project Associate II - ரூ.50,000 Project Assistant - ரூ.15,000 

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொண்டு பூர்த்தி செய்து தபால் மூலம் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தேவையாக நகல்களுடன் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு குறித்த முழு விவரத்திற்கு https://www.annauniv.edu/pdf/Recruitment_Project%20Scientist_27102022.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கூகுள் படிவம் - https://docs.google.com/forms/d/e/1FAIpQLSffFBE6l1k0ERXI1Cd8mgbXrk9ePI6OILKDEPCe6COLAo62MA/viewform

 

முகவரி :

The Director,

Centre for Climate Change and Disaster Management,

Anna University, Chennai - 600 025.