இந்திய ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, அக்னிபத் என்று இந்தியில் அழைக்கப்படும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. 

அக்னி பாதை திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள் எனவும் இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழ்நாடு இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியாற்ற இந்திய ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. 

கடலூரில் உள்ள ஆட்சேர்ப்பு அலுவலகத்தில் (தலைமையகம்) தமிழ்நாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அழைப்பு விடப்பட்டுள்ளது. 

காலிப்பணியிடங்கள் - வயது வரம்பு:

பணியின் பெயர் வயது வரம்பு கல்வித் தகுதி
அக்னிவீர் ஜெனரல் ட்யூட்டி

17 அரை வயது முதல் 21 வயது வரை 

45% மதிப்பெண்களோடு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

அக்னிவீர் டெக்னிக்கல் கிளார்க் 17 அரை வயது முதல் 21 வயது வரை 12வது தேர்ச்சி அல்லது 10வது தேர்ச்சி மற்றும் குறிப்பிட்ட பாடங்களில் டிப்ளமோ
அக்னிவீர் கிளார்க் / ஸ்டார் கீப்பர் டெக்னிக்கல் 17 அரை வயது முதல் 21 வயது வரை 60% மதிப்பெண்களோடு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 
அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன் 10வது பாஸ் 17 அரை வயது முதல் 21 வயது வரை 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 
அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன் 8வது பாஸ் 17 அரை வயது முதல் 21 வயது வரை  8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவு (இன்று) 16 பிப்ரவரி 2023 முதல் தொடங்கி 15 மார்ச் 2023 அன்று முடிவடைகிறது.

ஹால்டிக்கெட்கள்:

ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்கள் 17 ஏப்ரல் 2023 முதல் நடைமுறைக்கு வரும்.  ஆன்லைனில் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in மற்றும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிகளை அட்மிட் கார்டுகளுக்கு தொடர்ந்து பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) (பின் குறியீடு 600009) மற்றும் தொலைபேசி எண் 044-25674924 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.