தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் என்றழைக்கப்பாடும் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited)  ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


Marketing Consultant - 1


Logistics Consultant -1 


Consultant (Digital Transformation) - 1


Financial Management Analyst -1 


Application Developer-1


மொத்த பணியிடங்கள் - 5


கல்வித் தகுதி:



  • மார்க்கெடிங், லாஜிஸ்டிக்ஸ், நிதி மேலாண்மை ஆகிய பிரிவு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும். சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். பால் உற்பத்தி துறையில் பணிபுரிந்த அனுபவம் இருப்பின் கூடுதல் சிறப்பு. 

  • டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேசன் பணிக்கு விண்ணப்பிக்க இளநிலை பொறியியல் பட்டம், பி.டெக், ஐடி. முதுநிலை பொறியியல் பட்டம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  • Application  Developer பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டம், ஐ.டி. கம்யூட்டர் சயின்ஸ் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  Java, Java Script, Spring, FTL & Frame works ஆகிய ப்ரோகிராமிங் சாஃப்ட்வேர் பயன்படுத்துவதில் அனுபவம் இருக்க வேண்டும். 






ஊதிய விவரம்:


Marketing Consultant  - ரூ.1,50,000/-.ரூ.2,00,000/-


Logistics Consultant - ரூ.1,20,000/-


Consultant (Digital Transformation) - ரூ.2,00,000/-.ரூ.2,50,000/-


Financial Management Analyst -ரூ..1,50,000/-


Application Developer-ரூ.1,00,000/-


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க 50 வயது பூர்த்தியடைந்தவராகவும் 55 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


விண்ணப்ப கட்டணம்:


இதற்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு ரூ.1000/-மும் பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும். NEFT / UPI payment receipt விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டும்.


BENEFICIARY NAME : M/S THE TCMPF LIMITED
SBI Account : 30653819241
Type of Account : Savings Account
IFSC : SBIN0009581
BRANCH : CHAMIERS ROAD, NANDANAM, CHENNAI-35 


தேர்ந்தெடுக்கும் முறை:


இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து கல்வி மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு மதிப்பெண், பணி அனுபவம் ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.




விண்ணப்பிக்கும் முறை:


 இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://aavin.tn.gov.in/-என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அஞ்சலில் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


“Managing Director, The Tamilnadu Cooperative Milk
Producers’ Federation Limited, No.3A, 
Pasumpon Muthuramalinganar Salai, (Chamiers Road), 
Aavin Illam, Nandanam, Chennai-600 035


இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://aavin.tn.gov.in/documents/20142/315659/5763+Employment+Notification+new_0208.pdf/637b8aad-792b-585a-a871-794eb2539984 - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.08.2024