தமிழகத்தில் உள்ள சென்னை நீதித்துறை மாவட்ட சார்நிலை நீதித்துறை பணிக்கு நகல் பரிசோதகர் (Examiner),  முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailifr), இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Juniot Railiff),  கட்டளை எழுத்தர் (Pmcess Writer) மற்றும் ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான நேரடித் தேர்விற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 


இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விவரங்களுக்கும் விண்ணப்பதாரரே பொறுப்பாளார், விண்ணப்பதாரர்கள் இறுகியாக விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன்பு தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒருமுறை சரிபார்த்து அதர்பின் சமர்ப்பிக்கவும். இணையதள விண்ணப்பந்தைப் பூர்த்தி செய்யும்போது, தவறுகள் ஏற்படின் அதற்கு இணையதன் சேவையகம்' பொது சேவை மையங்கள் உள்ளிட்ட சேவை வழங்குவோரை குறை கூற இயலாது.


கல்வித் தகுதி: 


எப்.எஎப்.எல்.சி இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


“ஒளிப்படநகல் எடுப்பவர்" பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஆறு மாத காலத்திற்கு குறையாத ஒளிப்பட கருவியை இயக்கும் முன்அனுபவச் சான்றிதழை. சான்றிதழ் சரிபார்க்கும் சமயத்தில் சமர்பிக்க வேண்டும்.


 பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதிக்கு சமமான கல்வித் தகுதியைக் கோரும் விண்ணப்பதாரர்கள் அதற்கான ஆதாரங்களை இந்த அறிவிப்பின் தேதி அல்லது அதற்கு முன் வெளியிடப்பட்ட அரசாங்க ஆனை (G.O) வடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தவறினான், உரிய பரிசீலனைக்குப் பிறகு அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்த அறிவிப்பின் தேதிக்குப் பிறகு சமமான கல்வித் தகுதியைப் பொறுத்து வழங்கப்படும் அரசாணைகள் இந்த ஆட்சேர்ப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைக) சட்டம். 2016இன் பிரிவு 21ன் படி, மாநிலத்தின் அலுவல் மொழியான தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்கவில்லை எனில் எந்த ஒரு நபரும் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் எந்த ஒரு பணியிலும் நியமனம் செய்ய மாட்டார்கள். 


ஊதிய விவரம்:


இந்தப் பணியிடங்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஊதியம் வழங்கப்பட உள்ளது.





எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்:


எழுத்துத் தேர்வு, சென்னை நீதித்துறை மாவட்டத்திற்குள்ளோ அல்லது சென்னை  உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவு முடிவு எடுக்கும் வேறு இடத்திலோ நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு வயது வரம்பு. 


 



 


பணி அளிக்கப்படும் இடம்:


 தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள், இருப்பினும் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் எந்த ஒரு நேரத்திலும் நிர்வாக காரணங்கள், தேவை மற்றும் அவசிய நிமித்தம் காரணமாக ஒரு நீதிமன்றத்தின் அலுவலகத்திலிருந்து மற்றொரு நீதிமன்ற அலுவலகத்திற்கு மாற்றப்படுவார், (ஆ) மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் அனைத்து, பணியாளர்களும் தங்கள் மேலதிகாரிகள் அவ்வப்போது வழங்கும் அனைத்து பணிகளையும் விடுமுறை மற்றும் பணிநேரம் கடந்த நிலையிலும்அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்வின் தன்மை:


OMR முறையில் எழுத்துத்தேர்வின் (கொள்குறிவகை) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


கவனத்திற்கு:


 எழுத்துத் தேர்வு மற்றும் (b) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி பற்றிய விவரம், தருதியான தேர்வர்கருக்கு உரிய நேரத்தில் சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவின் https://www.mhc.tn.gov.in இணையதளம் வாயிலாக  மட்டுமோ தெரிவிக்கப்படும். தபால் மற்றும் கூரியர் வாயிலாக விண்ணப்பதாரர்களுக்கு எவ்வித தொடர்பும் இருக்காது. ஆகவே, சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்களை கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.


விண்ணப்பிக்க கடைசி தேதி- 22.08.2022


https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMPDOC/notification1_link1district=2_Tamil.pdf என்ற லிங்கை கிளிக் செய்து முழு விவரத்தைத் தெரிந்து கொள்ளலாம். 


https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMP2022/LoginAction_input.action விண்ணப்பிப்பதற்கான லிங்க்.


இணையதளம் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இணையதளம் அப்லாத முறைகளில் கட்டணம் செலுத்த அனுமதி இல்லை.