இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருவது ஜெரோதா. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வான  நிதின் கமத் ஒரு வித்தியாசமான போட்டியை தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளார். உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தனது  ஊழியர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான போட்டியை அறிவித்துள்ளது.














இதன்படி, உடல் ஆரோக்கியத்தை கணக்கிடும் அளவான பாடி மாஸ் இன்டக்ஸ் எனப்படும் பி.எம்.எஸ். அளவை 25-க்கும் கீழே கடைப்பிடித்தால் அரை மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். குறைவான பி.எம்.ஐ. அளவு உள்ள நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


ஜெரோதா நிறுவனம் 2010ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட இந்தியாவின் பணக்கார நிறுவனங்களின் பட்டியலில் 86வது இடத்தில் ஜெரோதா நிறுவனம் உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண