இந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி உலக சிறுநீரக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக சிறுநீரக புற்றுநோய் தினத்தின் கருப்பொருள், அதற்கான பல்வேறு சிகிச்சை முறைகளைப் பற்றி நாம் பேச வேண்டும் என்பதாகும். சிறுநீரக புற்றுநோய் எனப்படும் சிறுநீரகத்தில் ஏற்படும் புற்று, உலகம் முழுவதும் அதிகரித்து வரும் புற்றுநோய்களில் ஒன்றாகும்.


இது புற்றுநோயின் 13வது மிகவும் பரவலான வடிவமாகும் மற்றும் இது அண்மைக்காலமாக ஒரு பெரிய சுகாதார சவாலாக மாறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1.8 லட்சம் இறப்புகளுக்கு இது காரணமாகிறது. இந்தியாவில் மட்டும் 442 ஆண்களில் 1 நபருக்கும், 600 பெண்களில் 1 நபருக்கும் சிறுநீரகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பெண்களை விட ஆண்களிடையே இந்த நோய் அதிகமாக இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.




சிறுநீரக புற்றுநோயின் உண்டாகும் காரணங்கள் அதிகரிக்க பல காரணிகள் நேரடியாக கண்டறியப்பட்டாலும், மருத்துவ பயிற்சியாளர்கள் நோயை ஏற்படுத்தும் சரியான காரணிகளை இன்னும் விரிவாகக் கண்டறியவில்லை.


புகைபிடித்தல், பரம்பரையாகப் பரவுதல், உடல் பருமன் மற்றும் மது அருந்துதல் ஆகியவை சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் சில காரணிகளாகும். வயது மற்றொரு காரணியாகும், ஏனெனில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் இந்த நோய் உருவாகும் வாய்ப்பு அதிகம்.



அறிகுறிகள்:


இது ஒரு சைலண்ட் கில்லர் என்று கருதப்படுகிறது, சிறுநீரக புற்றுநோயின் நிகழ்வு உடனடியாக எந்த பெரிய உடலியல் அல்லது உடல் மாற்றங்களையும் ஏற்படுத்தாது. நோய் கணிசமாக முன்னேறிய பிறகுதான் அதன் அறிகுறிகள் வெளிவரத் தொடங்கும். சிறுநீரக புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் -


சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வெளியேறுதல் (மிகவும் பொதுவானது)
அடிவயிற்றில் அல்லது பக்கவாட்டில் கட்டி
பசியின்மை 
நீடித்த மற்றும் நீண்ட சோர்வு
உடல் எடை குறைவது
எந்த ஒரு சாதாரண காரணமும் இல்லாமல் மீண்டும் மீண்டும் காய்ச்சல்
மூச்சு திணறல்
இரத்தத்துடன் இருமல் 
எலும்புகளில் கடுமையான வலி


 


நோய் கண்டறிதல்


சிறுநீரக புற்றுநோயை சமாளிக்கும் போது ஆரம்பகால நோயறிதல் மற்றும் அடுத்தடுத்த சிகிச்சை ஆகியவை மிக முக்கியமான அம்சங்களாகும். உடனடி பரிசோதனை மற்றும் சாத்தியமான அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவர்களுடன் கலந்தாலோசிப்பது தொடக்கத்திலேயே இந்த நோயைக் கட்டுப்படுத்த உதவும்


சிகிச்சை: 


நோயின் நிலை மற்றும் நோயின் வயது மற்றும் சூழல் போன்ற பிற மாறுபட்ட காரணிகளுக்கு ஏற்ற சரியான சிகிச்சையை நோயாளிக்கு பரிந்துரைக்க வேண்டியது மிகவும் முக்கியம். சிறுநீரக புற்றுநோய்க்கான மிகவும் பொதுவான சிகிச்சை தேர்வுகளில் சில அறுவை சிகிச்சை, கீமோதெரபி, இலக்கு நோக்கிய சிகிச்சை மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சை ஆகும்.