கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக அமெரிக்க மத்திய வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் பண வீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் கடன் விகிதம் 0.75 சதவிகித புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
பணவீக்கத்தை மீண்டும் 2 சதவிகிதமாக கொண்டு வருவதில் உறுதி பூண்டுள்ளோம் என அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கைகளை வகுக்கும் திறந்த சந்தை குழு தெரிவித்துள்ளது. வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலம் வரையில், 0.5 சதவிகித புள்ளிகள் வரை மட்டுமே உயர்த்த மத்திய வங்கி ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், திடீரென அதிகரித்து வரும் பணவீக்கத்தால் இந்த நடவடிக்கையை மத்திய வங்கி எடுத்திருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 1994ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்திலிருந்து முதல்முறையாக 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது.
கூட்டம் முடிந்த, மத்திய வங்கியின் திட்டங்கள் என்ன என்பது குறித்து செய்தியாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் விளக்குவார். வரும் கூட்டங்களில் கொள்கை வகுப்பாளர்களின் அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும் என்பதை பற்றி தெரிந்த கொள்ள மத்திய வங்கியின் திட்டங்கள் உற்று கவனிக்கப்படும்.
இந்தாண்டின் இறுதியில், மத்திய வங்கியின் வட்டி விதிதம் 3.4 சதவிகிதமாக நிறைவு பெற உள்ளது. இது 1.9 சதவிகிதமாக நிறைவு பெறும் என மார்ச் மாதம் கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல,
மத்திய வங்கியின் விருப்ப பணவீக்கக் குறியீடு ஆண்டின் இறுதிக்குள் 5.2 சதவீதமாக உயரும், ஜிடிபி வளர்ச்சி முந்தைய 2.8 சதவீதத்திலிருந்து 2022ஆம் ஆண்டு 1.7 சதவீதமாகக் குறையும் என்றும் கமிட்டி உறுப்பினர்கள் எதிர்பார்த்தனர்.
இதுகுறித்து திறந்த சந்தை குழு உறுப்பினர்கள் பேசுகையில், "உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பணவீக்கத்தில் கூடுதல் மேல்நோக்கிய அழுத்தத்தை உருவாக்குகிறது. உலகப் பொருளாதார நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சீனாவில் அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாடுகள் வணிக விநியோகச் சங்கிலி இடையூறை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது" என்றார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்