World Hemophilia Day 2024 : உலக ஹீமோபிலியா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடுவதன் நோக்கமே மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். இது ஒருவரை கொல்லக்கூடிய அபாயகரமான ஒரு நோயாகும். இன்னும் ஏராளமான மக்களுக்கு இதை பற்றி அதிக அளவில் புரிதல் இல்லை.


இது ஒரு வகை இரத்தப்போக்கு கோளாறு நோயாகும். இந்த நோய் மிக குறைவானவர்களுக்கே இந்த நோயின் தாக்கம் காணப்படுகிறது. இது உடலில் இரத்தம் உறைதல் செயல்முறை குறைவதே இதற்கு காரணம். 


ஹீமோபிலியா என்றால் என்ன..? 


ஹீமோபிலியா என்பது ஒரு மரபணு இரத்தக் கோளாறு ஆகும். இதில், இரத்தம் சரியாக உறைவதில்லை இதுவே இந்த பிரச்சனைக்கு காரணம். இதன் காரணமாக, உடலில் இரத்தக் கட்டிகள் குறைவாகவே உருவாகின்றன. 


காயம் அல்லது இரத்தப்போக்கு ஏற்படும்போது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது. (அதர்வா நடித்த ஈட்டி படத்தில் இந்த நோய் குறித்து தெளிவாக கூறியிருப்பார்கள். நேரம் இருப்பின் ஒருமுறை இந்த படத்தை பார்த்துவிடவும்.) உங்கள் இரத்தம் உறைவதற்கு உதவுவதற்கு உங்கள் உடல் போதுமான புரதங்களை (உறைதல் காரணிகள்) உருவாக்காததால் ஹீமோபிலியா ஏற்படுகிறது. உறைதல் காரணிகள் உங்கள் இரத்தில் உள்ள புரதங்கள், இரத்த கசிவைக் கட்டுப்படுத்தும் இரத்தக் கட்டிகளை உருவாக்க அவை, உங்கள் பிளேட்லெட்டுகளுடன் வேலை செய்கின்றன. குறைந்த உறைதல் காரணி அளவுகள் காரணமாக இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கின்றன. 


சிறிய காயம் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது ஹீமோபிலியாவின் அறிகுறியாக இருக்கலாம். ஹீமோபிலியா நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சுமார் 1.3 லட்சம் ஹீமோபிலியா நோயாளிகள் உள்ளனர். 


அதிகளவில் ஆண்களுக்கே இந்த பாதிப்பு: 


இந்த பிரச்னை பெண்களை விட ஆண்களுக்கு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. ஆண்களுக்கு ஒரு X குரோமோசோம் உள்ளது. தாயிடமிருந்து குழந்தைக்கு வலு குறைந்த குரோமோசோம்கள் கடத்தப்பட்டால், இந்த நோய் குழந்தைக்கு உருவாகத் தொடங்குகிறது. சிறுமிகளுக்கு 2 X குரோமோசோம்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு. 


இதை தவிர்ப்பது எப்படி..? 



  • இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம்

  • மூட்டுகளில் இரத்தக்கசிவு பிரச்சனை இருந்தால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

  • மூட்டுகளில் இரத்தப்போக்கு பிரச்னையிலிருந்து நிவாரணம் பெற, உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.