வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சியால், மனிதனின் உணவு முறை, உறவு முறை, பழக்க வழக்கங்கள், என எல்லாவற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறன. அதன் பலனால் மனிதனின் பொருளாதாரம் ஒரு பக்கம் உயர்ந்தாலும், முன்பில்லாததை விட நோய்கள் பெருகி கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமானது இதயம் சார்ந்த நோய்கள். அதனால் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்புடன் பார்த்துக்கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
இதயத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியவை:
குடும்ப உறுப்பினர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் இருக்கிறதா?
குடும்ப உறுப்பினர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள், அதிக கொழுப்பு உள்ளிட்டவை இருக்கிறதா என்பதை முன்னரே செக் செய்து கொள்ள வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், உங்களது தாய் தந்தையர் ஆரோக்கியம் மட்டுமல்ல, உங்களுடன் உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியமும் உங்களது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் முன்னெச்சரிக்கைத் தேவை.
முறையான பரிசோதனை அவசியம்:
உங்களுடைய உடலின் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை முறையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காரணம் இன்றைய காலத்தில் 18 வயதிற்கு முன்னர் இதய சார்ந்த நோய்கள் வர ஆரம்பித்து விட்டன.
என்ன சாப்பிட வேண்டும்?
குறைவான கொழுப்பு சத்துக் கொண்ட பால், வெண்ணெய் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பேக்கரியில் கிடைக்கும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிகளவு கீரை, பழவகைகளை எடுத்துக்கொள்ளலாம்.
முறையான உடற்பயிற்சி
தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி கட்டாயம். அது நடைபயிற்சியாகவோ, ஓடுதலாகவோ, சைக்கிள் ஓட்டுதலாகவோ இருக்கலாம்.
புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
புகைப்பிடிப்பது, இருதயம் சார்ந்த நோய்களை அதிகரிக்கும். அதனால் நிச்சயம் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை வியாதி இருக்கிறதா?
சர்க்கரை வியாதி இருந்தால், அதனை கட்டுக்குள் வைத்திருக்க முறையான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.