தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையமும், தமிழகத்திலுள்ள திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு மட்டும் இப்போது தேர்தல் நடக்கவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து வருகின்ற 19 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்று, 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதி நாளையுடன் முடிவடைகிறது.




Mahaan Movie Trailer Out : நானா நீயா.. யாரு பெஸ்ட்.. போட்டி போட்டு நடிக்கும் அப்பா மகன்.. வெளியானது மகான் ட்ரெய்லர்..!


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைதீஸ்வரன் கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளிலும் அதிமுக, திமுக சுயச்சை என ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளையுடன் கடைசி தேதி என்பதால் இன்றும் நாளையும் ஏராளமானோர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய இருக்கின்றன.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்யாத நிலையில் சுயேட்சை மற்றும் பிற கட்சி வேட்பாளர்கள் மட்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.


CN Annadurai : ’சொல் வாள் சுழற்றி களம் கண்ட அண்ணா’ ஒற்றையாட்சி முறையை முளையிலேயே எதிர்த்த கலகக்காரன்..!




மேலும் வேட்பாளர்கள் பலர் வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவது தற்போது  பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை நகராட்சி 9-வது வார்டில் பேட்டியிட மனுத்தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர் பிரகாஷ் என்பவர், தனது வார்டில் உள்ள  குறைகளை பேப்பரில் எழுதி, அதனை மாலையாக அணிந்து குதிரையில் வந்து நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுத் தாக்கல் செய்ய குதிரையில் வார்டு பிரச்சினைகளை மாலையாக அணிவித்து கொண்டு வந்த சுயச்சை வேட்பாளர் பிரகாஷ் ஏராளமான பொதுமக்கள் வித்தியாசமாக பார்த்து சென்றனர். 


Urban Local Body Election 2022 | மண்டபம் இலவசம், ஐஸ்பாக்ஸ் இலவசம்.. விநோத வாக்குறுதிகளை கொடுத்த பெண் வேட்பாளர்..