இப்போதெல்லாம் சிறுவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டாலே, அய்யோ, உடலுக்கு நல்லது இல்லை. சாப்பிடாதன்னு சொல்வாங்க.. ஆனால், உடலுக்கு கொழுப்பு அவசியம் என்பது நம்மில் பலருக்கு எந்த புரிதல் இருக்கிறது என்பது கேள்விதான். உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவைகள் கெட்ட கொழுப்புகள்தான்.


உடல் ஆரோக்கியமாக இருக்க கொழுப்புத் தேவையானதுதான். உடலில் ஹார்மோன்கள், மெம்பரன்ஸ் மற்றும் வைட்டமின் டி தக்கவைத்தல் உள்ளிட்ட பலவற்றிற்கு கொழுப்பு மிகவும் அவசியமானது. கொழுப்பு நீரில் கரையக்கூடியது அல்ல. அதனால், Lipoproteins இரத்தம் வழியே நீந்தி உடலின் மற்ற உள்ளுருப்புகளுக்கு செல்ல பயன்படுகிறது.    


இதில் இரண்டு வகை இருக்கிறது. அவை LDL (Low-density Lipoproteins) மற்றும் HDL (high-density Lipoproteins)


குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் (Low-density Lipoproteins) - இவைதான் கெட்ட கொழுப்பு. குறைந்த அளவிலான Lipoproteins இதயத்தின் அறைகளான ஆர்டெரிகளில் அடைத்து இதயநோய்க்கு வழிவகுக்கும்.


அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் (high-density Lipoproteins)- என்பது இதயத்தில் கொழுப்பு அடைத்துக் கொள்ளாமல் பாதுகாக்கும் பணியை செய்பவை. அப்படி, உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்தாலும், அதை கல்லீரலில் இருந்து நீக்க உதவி புரிகிறது. 


அதிக கொழுப்பு என்பது என்ன?


குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் (Low-density Lipoproteins) அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்கிறது. இவை கெட்ட கொழுப்புகள். உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை ’ cholesterol’ என்று அழைக்கிறது அறிவியல் உலகம். 


இதற்கு  hypercholesterolemia அல்லது hyperlipidemia என்று பெயர். உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வதால், இதயத்தில் அடைப்பு ஏற்பட்டும். உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வதால் இதயம் மற்றும் மூளை தொடர்பாக பல பிரச்சனைகள் உருவாகும். உடல்நிலை பாதிக்கப்படும். 


உடலில் கெட்ட கொழுப்பினால் பல நோய்களின் கூடாரமாக உங்கள் உடல் மாறிவிடும்.


அதிக கொழுப்பு- 240 மி.கி /


பார்டர் லைன் கொழுப்பு என்பது - 200 -239 மி.கிராம் அளவு


இயல்பான கொழுப்பு - 200 மி.கிராம்


உடலில் கெட்ட கொழுப்பு தவிர்ப்பதற்கு என்னென்ன வழிகள்:


எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட வேண்டாம்.


துரித உணவுகளுக்கு ‘நோ’ சொல்லி பழகுங்கள்.


உங்கள் தட்டில் என்ன இருக்கிறது என்று கவனித்து, உணர்ந்து சத்தானவற்றை சாப்பிடுங்கள்.


நல்ல கொழுப்புள்ள உணவு பொருட்களை கவனித்து தேர்வு செய்யுங்கள்.



கொழுப்பின் அளவை குறைக்க சில வைட்டமின்கள் உதவும். வைட்டமின்கள் பி 3, வைட்டமின் ஈ. வைட்டமின் சி ஆகியவை கொழுப்பின் அளவை குறைக்கும் என்று அறியப்படுகிறது. எல்.டி.எல் அளவை குறைக்க வைட்டமின் சி உதவுவதாக கண்டறியப்பட்டது.


வைட்டமின் பி3 மற்றும் வைட்டமின் ஈ போன்றவைகள் தமனிகளில் கொழுப்பு உருவாக்குவதை குறைக்கிறது.


இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவுகளில் சிட்ரஸ் பழங்கள், பச்சை இலை காய்கறிகள், கோழி, காளான், டுனா மீன், பாதாம் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ளது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண