நடிகர் மோகன்லாலின் தனிப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் பால்சன் சிலவற்றை நமக்குத் தெரிவித்திருக்கிறார். அண்மையில் டாக்டர் பால்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் மோகன்லால் சிகப்பு இறைச்சி உணவை எடுத்துக் கொள்கிறார் எனவும் மற்றும்  பீன்ஸ் கோஸ் மற்றும் கொரிய ஸ்டைலில் உருவாக்கப்பட்ட காய்கறி சாலட் ஆகியவற்றை உண்ணும் அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.


பொதுவாக இறைச்சி இரண்டு வகைகளில் இருக்கிறது, ஒன்று சிவப்பு இறைச்சி மற்றும் வெள்ளை இறைச்சி, இதன்படி ஆடு, பன்றி மற்றும் மாடு ஆகியவை சிவப்பு இறைச்சி என்ற பிரிவின் கீழ் வருகிறது. கோழி,வாத்து மற்றும் முயல் போன்றவை வெள்ளை இறைச்சி என்பதன் கீழ் வருகிறது.


இந்த சிவப்பு இறைச்சியை பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. எனவே இந்த சிவப்பு இறைச்சியை உண்பதினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பதனை பார்ப்போம். சிவப்பு இறைச்சியில் புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்து காணப்படும் வைட்டமின் பி2,பி3,பி6,மற்றும்பி12 உள்ளன. மேலும் தியோமின் ,பாஸ்பரஸ் ,துத்தநாகம் மற்றும் செலினியம் தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. சிவப்பு இறைச்சியில் நிறைய சத்துக்கள் இருந்தாலும் இதில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் காணப்படுவதனால்  ரத்த குழாய்களில் கொழுப்பு படிவது, அஜீரணக் கோளாறு மற்றும் வாயு பிரச்சனைகள் ஏற்படும்.
இதைப் போலவே திடீரென உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையும் சிவப்பு இறைச்சியை அதிகம் உட்கொள்வதால் ஏற்படுகிறது. மேலும் பக்கவாத பிரச்சனையும் சிவப்பு இறைச்சியை உண்பவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம். இது மட்டுமல்லாமல் உணவு சார்ந்த நோய்கள் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த மாறுபாடு ஆகியவை ஏற்படவும் காரணமாக அமைகிறது.


சிவப்பு இறைச்சியில் உள்ள கார்னிடைன், சேர்மம் அட்ரீனல் மற்றும் மற்ற ரத்தக் குழாய்களை இறுக்கமடையச் செய்கிறது. இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது. அளவுக்கு அதிகமாக இரும்புச் சத்து உடலில் சேரும்போது உடலின் செயல்பாடு பாதிக்கப்படுவதோடு,  அல்சைமர் நோயை ஏற்படுத்துகிறது.


அதிகப்படியான இரும்பு சத்தானது மூளையில் உள்ள திசுக்களை பாதிப்படையச் செய்து நம் நரம்புகளின் வழியாக உடலோடு ஏற்படும் தொடர்பில் பாதிப்புகளை ஏற்படுத்தி  ஞாபக மறதி  எனப்படும் அல்சைமர் வரை கொண்டு வருகிறது.


சிவப்பு இறைச்சியை அதிகப்படியாக உண்ணுவது என்பது மார்பக புற்றுநோய்க்கு வழி வகுக்கும். அமெரிக்காவில் அதிகப்படியான பெண்கள் மார்பக புற்று நோயினால் அவதிப்படுவதற்கு முக்கியமான காரணம் அவர்கள் உணவுப் பழக்கத்தில் சிவப்பு இறைச்சி நிறைய இருப்பது தான் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது


இதே போலவே அமெரிக்கா மற்றும்  மேலை நாடுகளில் உடல் பருமன் பிரச்சனையினால் அவர்கள் பாதிக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் நிறைவுற்ற செரிக்க இயலாத கொழுப்புகள் நிறைந்த சிவப்பு இறைச்சியை எடுத்துக் கொள்வதுதான் என்பதும் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இத்தகைய நன்மைகள் மற்றும் தீமைகள் நிறைந்திருக்கும் இந்த உணவை,நடிகர் மோகன்லாலின் ஊட்டச்சத்து நிபுணர்  பரிந்துரைக்கிறார் என்றால்,அதற்கு பின்வரும் காரணங்கள் கூட இருக்கலாம்.


அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்று சொல்வதைப் போல,எந்த ஒரு உணவுமே அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளும்போது,அதில் இருக்கும் தீமைகள்,நம் உடலை பாதிக்கின்றது. ஆகவே உங்களுடைய உடல்வாகு, உங்களுடைய செரிக்கும் திறன், மற்றும் உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் என்பதன் அடிப்படையில் சிகப்பு இறைச்சி மட்டும் அன்றி, எந்த ஒரு உணவையுமே, அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.


மருத்துவரின், ஊட்டச்சத்து நிபுணர்களின் வாதமே இறுதியானது. ஆரோக்கியக் குறிப்புகளோ, மருத்துவக் குறிப்புகளோ, தகவல்களைப் பெறுவதற்காக மட்டுமே. எந்தவிதமான நலன் மற்றும் சிகிச்சை ஆலோசனைக்கும் மருத்துவரைத்தான் அணுகவேண்டும்