Hormone Boosting Hacks: ஹாப்பியா இருக்க ஹார்மோன் இருக்கா... இந்த ஹேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க
மனச்சோர்வாக இருங்கீங்களா? அப்போ உங்களை உற்சாகப்படுத்த ஒரு ஸ்பெஷல் ட்ரின்க் ஒன்றை பகிர்ந்துள்ளார் அகமதாபாத் நாராயண ஹ்ருதயாலயா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த உளவியல் மருத்துவ நிபுணரான ஸ்ருதி பரத்வாஜ்.
சமயங்களில் உடலும் மனமும் மிகவும் சோர்வாகவே இருக்கும். அது போன்ற நேரங்களில் உங்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்வதற்கான ஒரு ஹார்மோனை சுரப்பினால் உங்களின் மனநிலையிலும் மாற்றம் வரும் என்கிறார் நிபுணர். செரோடோனின், எண்டோர்பின், டோபமைன் மற்றும் ஆக்ஸிடாஸின் தான் அந்த ஹார்மோன்கள். இந்த நான்கு ஹார்மோன்களும் இன்பம், மகிழ்ச்சி போன்ற நேர்மறை உணர்வுகளை ஊக்குவிக்கும் தன்மை படைத்தன. எப்படி இந்த ஹார்மோன் சுரப்பிகளை தூண்டுவது?
தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலம் உங்களை ஹைட்ரேடெட் ஆக வைத்து கொள்ள முடியும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். உங்களை மகிழ்ச்சியடைய உதவும் ஹார்மோன் சுரப்பியை ஊக்குவிக்கும். வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளான பச்சை இலை காய்கறிகள், முட்டை, பருப்பு வகைகள் உங்களின் மனநிலையை மேம்படுத்தும். மனசோர்வு மற்றும் பதட்டம் உள்ளவர்களுக்கு ஃபோலேட் குறைபாடு இருக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகள் உடலில் ஆக்ஸிடாஸின் அளவை மேம்படுத்த உதவும். வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களும் உங்களின் மகிழ்ச்சியை ஊக்குவிக்கும்.
நட்ஸ் நிச்சயம் உங்கள் சிற்றுண்டியில் அல்லது காலை உணவில் எடுத்து கொள்ள வேண்டும். அவற்றில் டிரிப்டோபான் இருப்பதால் அவை செரோடோனின் ஹார்மோனை சுரக்க உதவுகிறது. பாதாம், வால்நட், ஆளி விதைகள், சியா விதைகள் போன்றவையும் மகிழ்ச்சியை ஊக்குவிக்கும். டார்க் சாக்லேட், வைட்டமின் சி நிறைந்த உணவுகளும் மகிழ்ச்சிக்கு உதவும்.
தயிர் போன்ற புரோபயாடிக்குகள் புளிக்க வைத்த இட்லி தோசை மாவிலும் இருப்பதால் நேர்மறை மனநிலையை அதிகரிக்கும்.
ஊட்டச்சத்து நிபுணர் மேலும் சில ஹேக்குகளையும் நம்மோடு பகிர்ந்துள்ளார்.
- மலையில் சூடாக ஒரு கப் காபி குடியுங்கள்
- சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றை அடிக்கடி உங்களின் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்
- தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் ஒரு க்ளாஸ் பாலில் மஞ்சள் தூள் சேர்த்து அருந்துங்கள்
- அதிகமாக உண்பதை தவிர்க்கவும்
காலை உணவை தவிர்த்தல் கூடாது