இந்த சமூகத்தில் தினம் தினம் புதுவிதமான நோய்கள் உருவாகி வருகிறது. இதனை தடுக்க மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நம்முடைய உடலை நாம் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டால் எந்தவித பிரச்னையும் வராது என நம்பப்படுகிறது.
இப்படியான நிலையில் நீரிழிவு நோய் மனித வாழ்க்கையை சீர்குலைக்கு நோயாக பார்க்கப்படுகிறது. அதில் இனிப்புகள் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் தினசரி எடுத்துக் கொள்ளும் சில வகையான உணவுகள் நீரிழிவு அபாயத்தையும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. அப்படியான நிலையில் நீரிழிவு நோயைத் தடுக்க என்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என காணலாம்.
சில உணவுகள் நம்முடைய இரத்த சர்க்கை அளவை கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கிறது. இது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் முன் நீரிழிவு நோய் பற்றிய அபாயத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
வறுத்த சிற்றுண்டிகள்
சிற்றுண்டிகள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வேளையாவது தவறாமல் இடம் பெற்று விடுகிறது. அவிப்பது, பொரிப்பது என அதன் தன்மை மட்டுமே மாறும் நிலையில் சிற்றுண்டி மாறாது. இப்படியான நிலையில் வறுத்த உணவுகள் ஆரோக்கியமற்ற கொழுப்பால் நிறைந்துள்ளது. இது உடலின் எடையை மெதுவாக அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கும்போது இன்சுலின் எதிர்ப்பும் அதிகரிக்கும். இது டைப் 2 நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக அமையும். மேலும் துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பல முறை சூடுபடுத்தப்படுவதால் கொழுப்பு உருவாகி இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
ஆரோக்கியமான தானியங்கள்
பலர் காலை உணவாக தானியங்களை சாப்பிடுகின்றனர். இவை ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் சர்க்கரை அளவு அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு சிறிய அளவு கூட உங்கள் இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கச் செய்யும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். சர்க்கரை மீண்டும் மீண்டும் அதிகரிப்பு உங்கள் உடலை இன்சுலினை சார்ந்திருக்கச் செய்கிறது. இந்தப் பழக்கம் காலப்போக்கில் உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் மற்றும் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. இவை இதயத்திற்கு மட்டுமல்ல, நீரிழிவு நோயுடனும் நேரடியாக தொடர்புடையவையாக பார்க்கப்படுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. இதனால் இரத்த சர்க்கரை கட்டுப்படுத்துவது கடினமாக்கப்படுகிறது.
சோடா, இனிப்பு பானங்கள்
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் அதிகளவு இனிப்பு உள்ளது. வீட்டு டப்பாவில் அடைக்கப்பட்ட சர்க்கரை அளவை விட இதில் அதிகம் இருக்கும். இது இரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரித்து நம்முடைய கணையத்தில் தொடர்ச்சியாக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது இயற்கையாக சுரக்கும் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கிறது.