குளிர்காலத்தில், பெரும்பாலான மக்கள் வறண்ட சரும பிரச்சினையால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இருப்பினும், சருமம் அதிகமாக வறண்டு இருப்பவர்கள் குளிர்காலம்தான் என்று  இல்லாமல் அனைத்து பருவங்களிலும் சருமம் குறித்து கவனம் கொள்ளலாம். மேலும் சில தவறுகள் மற்றும் கவனக்குறைவு காரணமாக, குளிர்காலத்தில் சருமம் இன்னும் அதிகமாக வறண்டு போகும். சருமத்தை சரியாக கவனிக்கவில்லை என்றால், அரிப்பு, வெடிப்பு, தோல் உரிதல், தோல் செதில் உருவாகுதல் போன்ற பிரச்சினைகள் தொடங்கும்.


வறண்ட சருமம் காரணமாக, நீங்கள் தடிப்புத் தோல் அழற்சி மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற சில தோல் கோளாறுகளால் பாதிக்கப்படலாம். இதுபோன்ற கடுமையான பிரச்சினைகளைத் தவிர்க்க, குளிர்காலத்தில் சருமப் பாதுகாப்புக்காகச் செய்யவேண்டியதும் செய்யக் கூடாததும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




செய்ய வேண்டியது...


வெதுவெதுப்பான நீரில் குளித்த பிறகு பாடி லோஷனைப் பயன்படுத்துங்கள்.


நீங்கள் எண்ணெய் கொண்டு தோல் மசாஜ் செய்யலாம். ஷியா பட்டர், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.


பாடி லோஷன் இல்லை என்றால், கண்டிப்பாக மாய்ஸ்சரைசர் கிரீம் தடவவும். வாங்கும் போது தரத்தை மனதில் கொள்ளுங்கள்.


நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல நேரிட்டால், கை க்ரீமை பர்ஸில் வைத்துக்கொள்ளுங்கள். கைகளை கழுவிய பின் இதை தடவினால் சருமம் ஈரப்பதமாக இருக்கும்.


முடியை அகற்ற ரேஸரைப் பயன்படுத்தினால், 4-5 உபயோகங்களுக்குப் பிறகு பிளேடை மாற்றவும். மாற்றவில்லை என்றால், தோல் வறண்டு போகும்.


உங்கள் முகத்திலும் எண்ணெய் தடவவும். இது வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்தை அளிக்கிறது.


வறண்ட சருமத்திற்கான தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்தவும். சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.


குளிர்காலத்தில் கூட முகத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வது அவசியம். இதனால் தோலின் துளைகள் சுத்தமாகும். 


ஆரோக்கியமான சருமத்தின் ரகசியம் நிறைய தூங்குவதுதான். நீங்கள் தினமும் 8 மணிநேரம் தூங்க வேண்டும்.


வறண்ட சருமத்தைத் தடுக்க.. செய்யக்கூடாதவை


உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், சோப்பை அதிகம் பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக, ஆயில் க்ளென்ஸரைப் பயன்படுத்துங்கள்.


மிகவும் சூடான நீரில் குளிக்க வேண்டாம். நீண்ட நேரம் வெந்நீரில் குளிக்க வேண்டாம். சூடான தண்ணீர் தொட்டியில் உட்கார வேண்டாம்.


ஆல்கஹால் சார்ந்த பொருட்களின் அதிகப்படியான பயன்பாட்டைத் தவிர்க்கவும்.


தோலை தேய்க்க வேண்டாம். டவலால் தேய்ப்பதைத் தவிர்க்கவும்.


நீண்ட நேரம் சருமத்தை நீரிழப்புடன் விடாதீர்கள். தண்ணீர் குடிக்கவும். அதிக திரவங்களை குடிக்கவும்.
ஸ்நோ பவுடர் போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்கவும். இதனால் சருமம் வறண்டு போகும். அதிக மேக்கப் போடுவதை தவிர்க்கவும்.


சருமத்தை சுத்தம் செய்யாமல் இரவில் தூங்க வேண்டாம். முகத்தில் இருக்கும் மேக்கப், தூசி, அழுக்கு, பாக்டீரியா மற்றும் இறந்த சரும செல்கள் ஆகியவை சருமத்தை சேதப்படுத்துகின்றன.