கண்கள் உடலின் மென்மையான உறுப்புகளுள் ஒன்று. எனினும் பல்வேறு அழகுப் பொருள்கள், குளிர்க் காலத்தில் ஏற்படும் தட்ப வெப்ப மாற்றங்கள் முதலானவை கண்களில் பல்வேறு சிக்கல்களுக்குக் காரணமாக அமையும். அவற்றைச் சரிவர கவனிக்காமல் இருந்தால், அவை ஆபத்தாக மாறலாம்.
தட்ப வெப்ப மாற்றங்கள், அலங்காரப் பொருள்கள் மட்டுமின்றி கண்ணில் லென்ஸ் அணிவதும் கண்ணில் பல்வேறு பிரச்னைகளைக் கொண்டு வரலாம். இதனால் கண்ணில் எரிச்சல், கண்ணீர் வழிவது, கண் சிவப்பது முதலான பிரச்னைகள் ஏற்படலா. எனவே குளிர்காலத்தில் நீண்ட நேரம் கான்டாக்ட் லென்ஸ் அணிவோர் தங்கள் கண்களைப் பராமரிக்க வேண்டும்.
கண்களைச் சரியாகப் பராமரிப்பது எப்படி?
பலருக்கு கண் உலர்தல் பிரச்னைகள் குளிர்காலத்தில் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படலாம். குளிர்காலத்தில் கண்ணில் உள்ள ஈரப்பதம் காற்றின் காரணமாக காய்ந்து விடுகிறது. இந்தக் குளிர்க் காலம் முழுவதும் உங்களைச் சூடாக வைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், குளிர் அதிகம் ஏற்பட்டால் கண்களில் கண்ணாடி அணிந்து கொள்வது அதீத குளிரில் இருந்து கண்களைப் பாதுகாக்கும்.
புத்தகம் படித்தாலோ, கணினி பயன்படுத்தினாலோ கண்கள் உலர்வது அதிகமாக ஏற்படலாம். இவ்வாறான செயல்களைத் தொடர்ந்து செய்து வரும் போது, கண்களைச் சிமிட்டுவது குறைவதால் கண்கள் விரைவாக உலக்ர்ந்து விடுகின்றன. இந்தச் செயல்கள் கண் பார்வையை அதிக கவனம் கோருகின்றன. இதனைச் சரி செய்வதற்குக் கண்களை அதிகம் சிமிட்ட வேண்டும். இதனால் கண்களில் தேவையான அளவுக்குக் கண்ணீர் உற்பத்தியாவது நிகழும்.
கண்களை அடிக்கடி தொடுவதைத் தவிர்த்தல்!
குளிர்க் காலத்தில் கண்களைக் கைகளால் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். கண்கள் உலர்ந்து இருப்பதால், கைகளில் இருக்கும் கிருமிகள், வைரஸ்கள், தூசி முதலானவை கண்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம். மேலும் கண்களின் வெண்படலத்தில் வைரஸ் நோய் ஏற்படுவதற்கும் காரணமாக அமையலாம்.
குளிர்க் காலத்தில் கைகளையும், கால்களையும் பாதுகாப்பாக மூடிக் கொள்ள வேண்டும். இது உடலைச் சூடாக வைத்துக் கொள்ள உதவும். குளிர் அதிகரிக்கும் போது, சில நேரங்களில் கண்களில் இருந்து கண்ணீர் பெருகலாம்.
டெல்லி முதலான நகரங்களில் குளிர்க் காலங்களில் காற்று மாசு அதிகரிக்கும். காற்று மாசு அதிகமாக இருப்பதால் வீட்டை விட்டு வெளியேறும் போது கண்களைப் பாதுகாப்பாக மூடிக் கொள்ள வேண்டும்.
குளிர்க் காலத்தில் உடலை ஈரமாக வைத்துக் கொள்ள வேண்டும். தோல் வறண்டு இருப்பதும் கண்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். உடலில் வறண்ட இடங்களில் க்ரீம் முதலானவற்றைத் தடவி தோல் வறட்சியைத் தடுக்க வேண்டும். இது தோலைப் பாதுகாப்பாகவும், நலனுடனும் வைத்துக் கொள்ள உதவும்.