தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 படுக்கையுடன் குரங்கு பொம்மை நோய்க்கான சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.




ஐரோப்பா,ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் தொற்று அபாயம் அரபு நாட்டில் இருந்து திருவனந்தபுரம் வந்த குழந்தைக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது  இதையடுத்து தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து அதிகமானோர் வரும் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவ வசதிகளுடன் குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு வாழ்த்துக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.




தூத்துக்குடி துறைமுகம் நகராக இருப்பதாலும் விமான நிலையம் இங்கு அமைந்திருப்பதாலும் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் குரங்கு அம்மைக்கான சிறப்பு வார்டு அமைக்க தமிழக அரசு அறிவுறுத்தியது. அதன் பெயரில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 படுக்கைகளுடன் கூடிய குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.




தூத்துக்குடி துறைமுகத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல்கள் வரும் நிலையில் அதில் பணி செய்யும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் மூலம் குரங்கு அம்மை பரவுவதற்கான வாய்ப்பு இருப்பத தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


குரங்கு அம்மை சிறப்பு வார்டில் அனைத்து விதமான மருந்துகள் முகக்கவசம் மற்றும் கவச உடை சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் யாரேனும் வரும் பட்சத்தில் அவர்களிடம் பெறப்பட்ட ரத்த மாதிரிகள் மற்றும் ஸ்வாப் மாதிரிகள் எடுத்து கிண்டி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் சிவகுமார் ஏற்பாட்டின் பேரில் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி,  நுண் உயிரியல் துணைத் தலைவர் ஜெயமுருகன், மருத்துவத்துறை பேராசிரியர் ராஜவேல் முருகன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.