பெண்களைவிட ஆண்களுக்கு செக்ஸில் ஆர்வம் அதிகம் என்பது பல ஆய்வறிக்கைகள் நிரூபித்துவிட்டன. பெண்களுக்கு செக்ஸில் ஆர்வம் உள்ளதா இல்லையா என்று கண்டுபிடிப்பது கடினம்தான் என்றாலும் செக்ஸ் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கற்பனை செய்து அதற்காகத் திட்டமிடுதலில் பெண்களுக்குத்தான் ஆர்வம் அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். எல்லாம் ஃபெர்பக்ட்டாகத் தயார் செய்துவிட்டு எதிர்பார்ப்புடன் இருக்கும் சமயங்களில் சட்டெனப் பார்ட்னருக்கு அதில் ஆர்வமில்லாமல் போவதுண்டு. இதனால் இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஆனால் செக்ஸில்  ஆண்களுக்கு ஆர்வம் குறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன


குடிப்பழக்கம்


அதிகக் குடிப்பழக்கம் செக்ஸுக்கான தூண்டுதலாக இருக்கும் டெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோனை ஈஸ்ட்ரோஜனாக மாற்றுகிறது. கல்லீரலில் ஏற்படும் இந்த மாற்றத்தால் செக்ஸில் ஆர்வம் குறையும்


மன அழுத்தம்


நாளொன்றுக்கு 10-12 மணி நேரம் வேலை செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அது உடலில் டெஸ்டோஸ்டெரோன் அளவைக் குறைக்கும். இதனால் செக்ஸில் ஆர்வம் குறையும்


மருத்துவச் சிக்கல்கள்


பிறப்புறுப்பில் மருத்துவ ரீதியான சிக்கல்கள் இருக்கும் ஆண்கள் பெரும்பாலும் செக்ஸை விரும்புவதில்லை. விந்தணு வெளியேறும் குழாயில் நீர்க்கட்டி,அல்லது ஆணுறுப்பில் கட்டி போன்ற பிரச்னைகள் இருக்கும் ஆண்கள் செக்ஸ் பற்றி யோசிப்பதுகூடக் கிடையாது. இதுபோன்ற நோய்களுக்கு மருத்துவத் தீர்வு கிடைத்த பின் சூழல் மாறும். 


30ம் முக்கியக் காரணம்


சிலருக்கு வயது கூடக் கூட செக்ஸ் மீதான ஆர்வம் குறையும். 30 வயதைக் கடந்தவர்களுக்கு சிறிது சிறிதாக செக்ஸ் மீதான ஆர்வம் குறையத் தொடங்கும் என்கிறார்கள். 


இறுக்கமான உடைகள்


இறுக்கமான உடைகள் அணிவது பார்ப்பதற்கு சிக்கான தோற்றத்தைக் கொடுத்தாலும் செக்ஸுக்கு சிக்கலாக இருக்கும் என்கிறார்கள். குறிப்பாக இறுக்கமான உள்ளாடைகள் உங்கள் பிறப்புறுக்கு இறுக்கத்தை ஏற்படுத்துவதால அதற்குச் சங்கடமான சூழலை ஏற்படுத்தும் எனச் சொல்கிறார்கள். 


ஆர்கானிக் அல்லாத உணவுகள் 


பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட உணவுகளை உண்பது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கும் அதனால் உடலில் லிபிடோ அளவைக் குறைக்கும்.மேலும் மெர்குரி மற்றும் ஆர்சனிக் அளவு அதிகமாக இருக்கும் உணவுகளும் உடலில் செக்ஸ் ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்தும் இவர்கள் டாக்டர்களைப் பார்ப்பது நலம். 


வாட்டர் பாட்டில் காரணமா?


பார்ட்னர் அதிகம் தண்ணீர் குடிப்பவர் என்றாலும் செக்ஸில் ஆர்வம் குறைய வாய்ப்பு உண்டு. காரணம் தண்ணீர் அல்ல அவர் பருகும் தண்ணீர் பாட்டில். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் உள்ள ஒரு வகை பைசெபினால் என்னும் கெமிக்கல் உடலில் ஹார்மோன் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும். மேலும் உணவுகளைச் சூடுபடுத்தும்போது மைக்ரோ வேவ் அவன்களை உபயோகிப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் உணவில் மாற்றத்தை ஏற்படுத்தும் அதனால் மைக்ரோவேவ் செய்யப்பட்ட உணவுகளை உண்பதும் சில நேரங்களில் ஆர்வத்தைக் குறைக்கும் என்கிறார்.