உடலுறவில் ஆண்களுக்கு ஆணுறுப்பு இன்பம் ஏற்படுவதுபோல பெண்களுக்கும் உச்சமடையும் போது பெண்ணுறுப்பில் ஆர்காஸம் ஏற்படும். ஆனால் செக்ஸ் என்றாலே பெண்களுக்கு யோனியில்தான் (vagina) இன்பம் ஏற்படும் என பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு செக்ஸில் முழுக்க முழுக்க இன்பம் உண்டாவது யோனியில் இருக்கும் க்ளிட்டோரிஸ் என்னும் பட்டாணி அளவிலான உறுப்பால். அதைதான் பெரும்பாலும் ஜி ஸ்பாட் என்பார்கள். பெண்களுக்கு செக்ஸில் கிளர்ச்சி ஏற்படுத்தும் இந்தப் பகுதி உண்மையிலேயே இருக்கிறதா இல்லையா என சர்வதேச அளவில் பெரிய ஆராய்ச்சியே நடந்தது.
உங்கள் பார்ட்னருடன் செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்பு உங்கள் கிளிட்டோரிஸ் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் சில...
கிளர்ச்சிக்கான உறுப்பு
ஆண்களில் ஆணுறுப்பின் நுணியைப் போலப் பெண்களுக்கு பெண்ணுறுப்பில் இருக்கும் க்ளிட்டோரிஸ் செக்ஸில் கிளர்ச்சியை ஏற்படுத்தும் உறுப்பாக இருக்கிறது.சில பெண்களுக்கு நேரடியாக கிளிட்டோரிஸைத் தொடுகையில்தான் கிளர்ச்சியே ஏற்படும். பெண்கள் கருத்தரிப்பது போன்றவற்றில் க்ளிட்டாரிஸுக்கு எந்தப் பங்கும் இல்லையென்றாலும் செக்ஸில் பெண்களின் மகிழ்ச்சிக்கு முழுக்க முழுக்கப் பொறுப்பேற்கும் உறுப்பாக க்ளிட்டாரிஸ் உள்ளது.
ஆணுறுப்பை விட மென்மையானது
மொத்தம் 8000 நரம்பு நுணிகளைக் கொண்ட இந்த கிளிட்டாரிஸ் ஆணுறுப்பை விட மிகவும் மென்மையானது.அதனால்தான் செக்ஸில் பெரும்பாலான பெண்கள் க்ளிட்டாரிஸை வேகமாகத் தொடுவதற்கு விருப்பப்படுவதில்லை. அது அவர்களுக்குக் கூடுதல் எரிச்சல் அல்லது வலியை ஏற்படுத்தும். செக்ஸில் வலி ஏற்படுவதை விரும்புபவர்கள் அதனை அனுமதிப்பதும் உண்டு.
லூப்ரிகண்ட் இல்லாமல் க்ளிட்டாரிஸைத் தொடாதீர்கள்
மிகவும் மென்மையான உறுப்பு என்பதால் தங்களது பார்ட்னர் போல அதிகம் பெண்கள் தங்களது பிறப்புறுப்பின் வழியாக நீர் சுரப்பதில்லை. அப்படி சுரப்பவை கூட யோனி வழியாகத்தான் சுரக்கும். அதனால் பெண்களின் க்ளிட்டாரிஸைத் தொடுவதற்கு முன்பு கைகளில் தேவையான அளவு லூப்ரிகண்ட்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
க்ளிட்டாரிஸ் எங்கே இருக்க வேண்டும்?
எல்லா பெண்களுக்கும் க்ளிட்டாரிஸ் ஒரே மாதிரியாக இருக்காது. அதன் அளவும் ஒவ்வொருவருக்கும் பிறப்புறுப்பு மார்பகங்கள் ஆகியவை மாறுபடுவதுபோல மாறுபடும். பெண்ணுறுப்பு ஓட்டையிலிருந்து சுமார் 2.5 செமீ அளவில் க்ளிட்டாரிஸ் இருக்கும் பெண்களுக்குதான் ஆர்காஸம் நினைத்த மாத்திரத்தில் ஏற்படும் என்றும் மற்றவர்களுக்கு பெரும்பாலும்ம் ஆர்காஸம் ஏற்படுவது கடினமானதாக இருக்கும்.
க்ளிட்டாரிஸை அறிவது எப்படி?
பெண்கள் பெரும்பாலானவர்களுக்கு தனது க்ளிட்டாரிஸில் கிளர்ச்சி ஏற்படுத்தும் பகுதியைக் கண்டறிவது கடினம். பார்ட்னருடன் இணைந்து கண்டுபிடிப்பது தயக்கமாக இருப்பவர்கள் சுய இன்பம் செய்வது தன்னைத் தானே தொடுவது வழியாக தனது க்ளிட்டாரிஸை கண்டறியலாம். க்ளிட்டாரிஸ் பகுதியில் உங்களது ஜி ஸ்பாட்டைக் கண்டறிவது செக்ஸில் உங்களுக்கு கூடுதல் இன்பம் அளிப்பதாக இருக்கும்.