இன்று முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் 110 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும், வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள கீழ்கண்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

சுகாதாரத்துறையின் 10 அறிவுறுத்தல்கள்:


 

1.வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

 

2.நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள்.

 

3.ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர்,  கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். பழச்சாறு அருந்தலாம் அதுவும் ஐஸ் போடாமல், மற்றும் இளநீர் அருந்தலாம்.  இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர், இதை பாட்டிலில் எடுத்து செல்லுங்கள்.‌

 

4.அனைவரும் காலையிலிருந்து மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ளுங்கள். 

 

5.காபி டீ இன்னும் ஒரு மாதத்திற்கு வேண்டாம். 

 

6.காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிட்டு வர பித்தம் தணியும். 

 

7.முதலுதவி போல எலுமிச்சை எப்போதும் வீட்டில் இருக்கட்டும். 

 

8.மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும்  காரம் வேண்டாம்.

 

9.வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மூளையில் இருந்து வரும் நரம்புகள் ஒலியின் வேகத்தை விட அதிக ஆற்றலை செலுத்தி என்ன நடக்கிறது என அறிய முயற்சி செய்யும். அந்த வேகத்தை இரத்தம் நாளங்கள் தாங்க முடியாமல் வெடித்து விட வாய்ப்புண்டு. ஆகையால் உடனே அருந்த வேண்டும் என்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும். ஆபத்தில் இருந்து தப்பலாம். 

 

10.மண்பானை நீர் நம்மை எல்லா காலத்திலும் காக்கும்.

 

பொதுமக்கள் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி தற்காத்துக் கொள்ளுங்கள்.