வெங்காயம் சிறியது, பெரியது என இரண்டிலுமே நன்மைகள் உள்ளது நமக்குத் தெரியும். ஆனால் வெங்காயத் தோலில் உள்ள நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதைப் படித்தால் இனி வெங்காயத் தோலை நீங்கள் தூக்கி எறிய மாட்டீர்கள்.


1. வெங்காய தோலை ஏன் தூக்கி எறியக்கூடாது?


வெங்காயம் நம் வீட்டில் அன்றாட சமையலில் பயன்படுகிறது. தோலை உரித்து எறிந்துவிட்டு வெங்காயத்தை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்தத் தோலை பதப்படுத்தினால் ப்ரெட் முதல் ஸ்டூ வரை சூப் முதல் கேச பராமரிப்பு வரை பலவகையிலும் பயன் பெறலாம். அதனால், வெங்காய தோலை தூக்கி எறியாதீர்கள்.


2. நரை முடிக்கு வெங்காய தோல்


நரை முடிக்கும் வெங்காய தோலுக்கும் என்ன முடிச்சு எனக் கேட்கலாம். வெங்காய தோலை நீக்கி அதை இரும்புக் கடாயில் போட்டு கருக்கி அதை துகள்களாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதில் கேச எண்ணெய் அல்லது ஆலோவீரா ஜெல் சேர்த்து தலையில் பூசுங்கள். 10 நிமிட டை எல்லாம் தோற்றுப் போகும் இது தரும் பலனில். இதைப் பூசிவிட்டு குளிக்க வேண்டாம். ஆனால் ஒன்றிரண்டு முறை தலையை அலசிய பின்னர் இந்த இயற்கை டை போய்விடும்.


3. உணவில் மனம் சேர்க்க


வெங்காய தோலை காய வைத்தோ அல்லது வறுத்தோ பொடி செய்து அதை சூப், ஸ்டூ, வீட்டில் தயாரித்த் ப்ரெட் வகைகளில் சேர்த்து ருசிக்கலாம்.


4. வலி நிவாரண பானம்


வலி என்றால் மாத்திரை தான் சாப்பிட வேண்டும் என்றில்லை. சிறிய வலிகளுக்கு வெங்காய டீ குடிக்கலாம். என்னது பிரியாணியில் சேர்க்கலாம் டீயாக எப்படிக் குடிப்பது எனக் கேட்கிறீர்களா? சில வெங்காய தோல்களை நீரில் கொதிக்க வைத்து படுக்கைக்கு செல்லும் முன் அருந்திப் பாருங்கள் உடல் வலி பறந்துவிடும்.




5. தூக்கத்துக்கும் மருந்து


இந்த ஆனியன் டீ உங்கள் உடல் வலிக்கு நிவாரணம் அளிப்பதோடு தூக்கத்தையும் வரவழைக்கிறது. இதில் உள்ளா எல் டிரிப்டோஃபேன், ஒருவித அமினோ அமிலம். இது தூக்கத்தை வரவழைக்கிறது. நரம்புகளை சீராக்க உதவுகிறது.


6. ஹேர் டோனர்


உங்கள் கேசம் ஜீவன் இல்லாமல் இருந்தாலோ நிறைய முடி உதிர்ந்தாலோ வெங்காய தோலை ஹேர் டோனராக பயன்படுத்தலாம். வெங்காயத்தில் சல்ஃபர் உள்ளது. அது முடி வளர்தலுக்கு உதவுகிறது. மேலும் கேசத்திற்கு பொலிவைத் தருகிறது. வெங்காய தோலை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வையுங்கள். அது கொதித்துவந்து நிறம் மாறியதும் அதை ஒரு பாட்டிலில் சேகரித்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் தலையில் தேய்த்து வாருங்கள். நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்.


7. ஆனியன் காம்போஸ்ட்


உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால். வெங்காயத் தோலை கீழே போடாதீர்கள். அதை சேகரித்து செடிகளுக்கு இயற்கை உரமாக போட்டுவர செடிகள் நல்ல வளர்ச்சி காணும்.