நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் நமது உடலின் ஆற்றலில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஆற்றல் ஆனது நமது உடலுறுப்புகளில் மட்டுமல்லாது நமது தோலிலும் பிரதிபலிக்கிறது. பொதுவாக நமது உடலுக்குத் தேவையான சத்தான உணவுகளை மருத்துவரின் ஆலோசனையின் படி தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், அந்த உணவு நமது உடலின் எடையை சமச்சீராக தொடர உதவுவதுடன் நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. இதுமட்டுமன்றி இந்த உணவுகள் நமது முடி, தோல் ஆகியவற்றுக்கு புத்துணர்ச்சி அளித்து முடிக் கொட்டுவதை தடுத்து, பளபளப்பான தோலையும் நமக்குத் தருகிறது.
தற்போது பனிக்காலம் என்பதால் பெரும்பான்மையானோருக்கு பனியின் காரணமாக தோல் வறண்டு போய் விடும். இந்த வறட்சியை சமாளிக்க தோலில் சரியான அளவில் ஈரப்பதம் இருப்பதை பார்த்துக்கொள்ளவது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் நமது தோலை பாதுகாக்க தேவையான உணவுகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தண்ணீர்
உங்களுடைய டயட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது தண்ணீர். தண்ணீர் உடலிலும், தோலில் நடக்கும் நீரேற்றம் (hydration) சரிவர நடக்க உதவிபுரிகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது தோலை மெருதுவாக வைக்க உதவும்.
கொழுப்பு அமிலங்கள்: (Fatty Acids)
ஓமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இருக்ககூடிய வால்நட், மீன் வகைகள் (Salmon and Mackerel), ஆளி விதைகள் உள்ளிட்டவைகளை எடுத்துக்கொள்ளும் போது, இதில் இருக்கும் அமிலங்கள் இயற்கையாக நமது தோலின் வறட்சியை சமன் செய்ய உதவுகிறது.
கேரட்
கேரட்டில் பீட்டா-கரோட்டின், லைகோபீன் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை நமது தோலை புற ஊதா கதிர்களிமிருந்து பாதுகாக்கின்றன. இதுமட்டுமன்றி கேரட்டில் இருக்கும் விட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் ஆண்டி ஆக்சிடன்ஸ் தோல் பிரச்னைகளை தடுக்க உதவுகிறது.
சிட்ரஸ் பழங்கள்:
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, திராட்சை, டேஞ்சரின் உள்ளிட்டப் பழங்களை இந்த காலங்களில் பழச்சாறுகளாக எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் விட்டமின் சி சத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் தண்ணீர் நிரேற்றத்திற்கும், நார்ச்சத்து ஜீரணத்திற்கும் உதவியாக உள்ளது.
சீனி கிழங்கு
சீனி கிழங்கில் இருக்கும் நார்சத்துகள் அடுத்த நேர உணவிற்கு அதிக நேர இடைவெளியை தருகிறது. மேலும் இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் தோலுக்கு ஊட்டச்சத்து அளிப்பதோடு மட்டுமல்லாமல் தோலை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்