எலன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் முதுகு வலி குறித்து நகைச்சுவையாக  ஒரு மீம் பகிர்ந்திருந்தார்.முதுகு வலி இன்று பெரியவர்களில் இருந்து இளம் வயதினர் வரை வயது வித்தியாசமின்றி அனைவருக்கு இருக்கும் ஒரு பொதுப் பிரச்சனையாக மாறிவிட்டிருக்கிறது.


ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதனால், சோர்வு அல்லது மற்ற சில காரணங்களால் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இன்றையச் சூழலிம் இவற்றை குணப்படுத்த போதுமான கவனம் நாம் செலுத்துவதில்லை. பெரும்பாலான நேரங்களில் வலி நிவாரணி மாத்திரைகளை வைத்தே நான் ஒவ்வொரு நாளையும் ஓட்டிக்கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக மாத்திரைகளை எடுத்துகொள்வது வேறு சில தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளது.முதுகு வலியை இந்த சில எளிய வீட்டு முறைகளின் படி குணப்படுத்தலாம்.


இஞ்சி


இஞ்சி நம்  சமயலறையில் இருக்கும் மிக அத்தியாவசிய பொருட்களில் ஒன்று. இஞ்சியில்  ஜிஞ்சரோன், ஜிஞ்சரோல் போன்ற இரசாயனங்கள் இருப்பதால் இது இயற்கையாகவே ஒரு வலி நிவாரணியாக பயன்படுத்தக் கூடியது. மேலும் முதுகு வலி மற்றும் தசை வீக்கத்தை குறைக்க இஞ்சி மிகவும் உதவக்கூடியது. முதுகு வலியால் சிரமப்படுபவர்கள் இஞ்சியை  நீரில் மிதமான சூட்டில் பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்கு கொதிக்க விட்டு உட்கொள்ளலாம்.


மஞ்சள்


முதுகு வலி, தசை வீக்கத்தை பெரியளவில் குணப்படுத்துவதில் மஞ்சள் மிக முக்கியமான பங்காற்றுகிறது என பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. மஞ்சளில் காணப்படும் கர்கியுமின் என்கிற ஒரு பகுதி தசை வீக்கத்தை குறைக்கும் தன்மையுடையது. மஞ்சளை பாலில் கலந்து அருந்துவதால் அல்லது எண்ணெயில் மஞ்சள் சேர்த்து சூடாக்கி வலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் முதுகு வலி குணமடையும்.


பூண்டு


கடுகு எண்ணெயில் பூண்டை சேர்த்து சூடாக்கி சூடு இறங்கியபின் அதை முதுகில் தேய்த்து வந்தால் முதுகுவலியை குணப்படுத்தலாம். மேலும் மருத்துவரின் முறையான ஆலோசனையின் கீழ் பூண்டை உணவில் சேர்த்துக்கொண்டு நாம் அமரும் முறையை சரிசெய்வதன் மூலம் முதுகு வலியை குறைக்கலாம்


இலவங்கம்பட்டை


பொதுவாக நாம் அன்றாடம் சமையலறையில் பயன்படுத்தும் மற்றொரு பொருள் இலவங்கம்பட்டை. தேனில் இலவங்கம்பட்டையை கலந்து சாப்பிட்டால் உடல் வலி குணமடையும்.  


கல் உப்பு


பல் வலியில் தொடங்கி நாம் பொதுவாக பல பிரச்சனைகளுக்கு நமது அம்மாக்கள் தீர்வாக சொல்வது கல் உப்பு ஆகும். சூடான நீரில் கல் உப்பை சேர்த்து உடலில் இருக்கும் பெரும்பாலான வலிகளுக்கு தீர்வு காணலாம். உப்பு நம் எலும்புகளுக்கு வலுச்சேர்ப்பதன் மூலம் வலிகளை குணப்படுத்தும் தன்மை உடையது. மூட்டு வலிக்கு கல் உப்பு ஒர் எளிமையான தீர்வாக என்றும் விளங்குகிறது. அதேபோல் தசை வீக்கத்திற்கு, முதுகு வலிக்கு கல் உப்பு உடனடி தீர்வுகளை தரக்கூடியது.