தொடங்கிய வேகத்தில் பார்ட்னர்களில் யாரோ ஒருவர் உச்சம் அடைந்ததும் இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிவிடும் வகையான செக்ஸில் அப்படியென்ன மகிழ்ச்சி இருந்துவிடப் போகிறது?, கடமைக்கு உச்சம் அடைந்தோம் என்பதைத் தவிர.. ஆனால் பாலுறவு என்பதும் மகிழ்ச்சியானதாக சிலசமயங்களில் ஒருவர் மீதான ஒருவர் அன்பை ஜாலியாகப் பகிரும் விஷயமாக இருக்க வேண்டும், சில சமயங்களில் இண்டர்கோர்ஸ் கூடத் தேவையில்லை என்கிறார் பாலியல் நிபுணர் பல்லவி பர்ன்வால். 


ஒரு சூப்பரான உடலுறவுக்கு என்னவெல்லாம் முக்கியம் என்பதற்கான ஐந்து முக்கிய டிப்ஸ்களைத் தருகிறார் அவர். 


1. செக்ஸ் குறித்து பேசுவது தொடர்பான தயக்கத்திலிருந்து வெளியே வருவது. 


செக்ஸ் என்கிற மூன்று சொல்லை உச்சரித்ததுமே அதனை ஏதோ பெரிய குற்றம் போல அணுகுகிறீர்களா?, முதலில் அந்தக் குற்ற உணர்விலிருந்தும் தயக்கத்திலிருந்தும்தான் வெளியே வரவேண்டும். இதனைக் குற்றமாகக் காட்டுபவை மதம், அரசியல் சில சமயங்களில் ஊடகம். ஒரு பக்கத்தில் உடலுறவு குறித்து பேசுவதைப் பாவமாகக் காட்டும் அதேசமயம் அதே செக்ஸ்தான் பல வணிகங்களின் மார்க்கெட்டிங்குக்கும் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இந்தத் தயக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும். பாலியல், பாலுறவு குறித்து நீங்களே படித்துத் தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அது பற்றிப் பேசுவதை நார்மலாக்க வேண்டும்.


2.  சினிமாத்தனமான உடலுறவா அல்லது நமக்குப் பிடித்தமாதிரியான உடலுறவா?


நமக்குப் பிடித்தமாதிரியான உடலுறவு என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நமக்கும் நமது பார்ட்னருக்கும் எங்கே தொட்டால் பிடிக்கும், எங்கே தொட்டால் பிடிக்காது என்பது மாதிரியான சின்னச் சின்ன விஷயங்களைத் தெரிந்துகொள்வது. சிலசமயங்களில் பார்ட்னருக்கு உச்சம் அடைவது கூடத் தேவைப்படாது, சில சமயங்களில் இண்டர்கோர்ஸ் கூடத் தேவைப்படாது. ஆனால் இதையெல்லாம் எப்படித் தெரிந்துகொள்வது. சினிமாவைப் பார்த்து மட்டுமே இதுதான் உடலுறவு எனத் தவறாகப் புரிந்துகொள்வதிலிருந்து வெளியே வருவதுதான் இதற்கு முதல்படி. 


3. தொடுதல்


செக்ஸ் முதலில் ஒருவரை ஒருவர் தொடுதலில்தான் தொடங்கும். உங்கள் பார்ட்னருக்கு எப்படித் தொட்டால் பிடிக்கும்?. விளையாட்டுத்தனமாகத் தொடுவது பிடிக்குமா, கொஞ்சம் காமம் கலந்து தொடுவது பிடிக்குமா?, அல்லது இன்னும் கொஞ்சம் ஒருபடி மேலே இருக்கவேண்டுமா? இதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்


4. செக்ஸில் கிரியேட்டிவிட்டி!


உடலுறவு குறித்த ஃபேண்டஸி நம்மில் நிறைய பேருக்கு இருக்கும்.ஆனால் பார்ன் படங்களைப் பார்த்து மட்டுமே பழக்கப்பட்ட மூளைக்கு இந்த ஃபேண்டஸியும் அதையொட்டியே உருவாகியிருக்கும். கொஞ்சம் மாறுதலாக உங்களுக்கான ஃபேண்டஸியை நீங்களே உருவாக்குங்கள். செக்ஸில் உங்கள் கிரியேட்டிவிட்டி நீங்களே உருவாக்குவதால் உங்கள் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும் உங்கள் பார்ட்னர் மீதான கூடுதல் காதலையும் வெளிப்படுத்தும். 


5. செக்ஸில் ‘கிக்’ கொஞ்சம் தேவையா?


நீண்டகால உறவுகளில் பார்ட்னர்கள் செக்ஸ் போரடித்துவிட்டதாகச் சொல்வார்கள். ஆனால் அது போராடிக்காமல் இருக்க பல வழிகள் இருக்கின்றன. அது செக்ஸை கொஞ்சம் கூடுதல் ’கிக்’ கலந்ததாக்குவது. ‘கிக்’ என்றால் வெறும் போதை சமாச்சாரமல்ல. உங்களுக்குப் பிடித்த ஃபேண்டஸி செக்ஸ் குறித்து விவாதிப்பது, படுக்கையறையில் அதனை நடித்துப் பார்ப்பது, சில சமயங்களில் முத்தங்களும் ஐ லவ்யூக்களும் கூட இந்த கிக்கில் சேரும் என்கிறார் பல்லவி.