பருவமழையின் வருகை பல உடல்நலப் பிரச்சினைகளையும் கூடவே சேர்த்து கொண்டு வருகிறது. பருவகால காய்ச்சலைப் போலவே மழைக்காலத்தில் நீரால் பரவும் நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பூஞ்சை தொற்று, மழைக்காலத்தில் ஏற்படும் ஒவ்வாமை, டெங்கு, டைஃபாய்டு உட்பட பல அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். டெங்கு மற்றும் மலேரியா இந்த காலகட்டத்தில் பரவலாக இருந்தாலும், இந்த ஆண்டு கேரளாவில் எலிக்காய்ச்சல் நோய் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.


லெப்டோஸ்பிரோசிஸ் (எ) எலிக்காய்ச்சல் 


லெப்டோஸ்பிரோசிஸ் என்ற பெயர் கொண்ட இது பெரும்பாலும் எலிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. இது விலங்குகளில் இருந்து உருவாகும் ஒரு அசாதாரண பாக்டீரியா தொற்று ஆகும். இது பொதுவாக எலிகள், பண்ணை விலங்குகள் அல்லது நாய்களால் அவற்றின் மலம் மூலம் பரவுகிறது. இது துன்புறுத்தும் நோய்தான் என்றாலும், உயிருக்கு ஆபத்தானது அல்ல என்று கூறபபடுகின்றது. கேரளாவில், எலிக்காய்ச்சல் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து, 50,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



எலி காய்ச்சலின் அறிகுறிகள்


எலி காய்ச்சலுக்கு சில பொதுவான அறிகுறிகள் இருந்தாலும், சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் கூட இருக்கலாம். லெப்டோஸ்பிரோசிஸ் சிறுநீரக பாதிப்பு, மூளைக்காய்ச்சல் (மூளை மற்றும் முள்ளந்தண்டு வடத்தைச் சுற்றியுள்ள சவ்வு அழற்சி), கல்லீரல் செயலிழப்பு, சுவாசக் கோளாறு ஆகிய பிரச்சினைகள் ஏற்படும், மிக அரிதாக, சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணம் கூட ஏற்படலாம்.



  • குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி

  • வயிற்று வலி

  • தலைவலி

  • அதிக காய்ச்சல் மற்றும் தடிப்புகள்

  • மஞ்சள் காமாலை

  • கண்களின் நிறம் மாறுவது (பெரும்பாலும் சிவப்பு)


தொடர்புடைய செய்திகள்: FIR - DIG Vijayakumar : ’இதை எப்படி பயன்படுத்துவது..’ : தனிப்பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி.. வெளியான பரபரப்பு தகவல்கள்


எலிக்காய்ச்சல் எவ்வளவு காலம் நீடிக்கும்?


நோய்த்தொற்று ஏற்பட்டதில் இருந்து, சில நாட்கள் முதல் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் வரை செல்லலாம். டெங்கு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் காரணமாக மாநிலம் முழுவதும் ஏராளமான நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதால் பாக்டீரியா தொற்றுகளும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில சுகாதார ஆணையத்தின் பரிந்துரையின்படி, மக்கள் அவர்களே எதாவது மருந்துகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மருத்துவ ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.



தண்ணீரால் பரவும் நோய்களைத் தவிர்க்க 5 வழிகள்


குழாய் நீரைத் தவிர்க்கவும்:


பொது இடங்களில் குழாய் நீர் எளிதில் கிடைக்கிறது. அசுத்தமான நீரின் மூலம் பரவும் நோய்களின் வாய்ப்பைக் குறைக்க, உடனடியாக குழாய் நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.


கை சுகாதாரம்:


நல்ல கை சுகாதாரத்தை கடைபிடிப்பது முக்கியம். கழிவறை பயன்படுத்திய பின், சாப்பிடுவதற்கு முன், வெளியில் இருந்து வந்த பின், கைகளை கழுவவும்.


காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தம் செய்யுங்கள்:


காய்கறிகள் மற்றும் பழங்களை வெதுவெதுப்பான உப்பு நீரில் கழுவி, அது சாப்பிடத் தயாராக இருப்பதாக நீங்கள் உணரும் வரை ஊற வைக்கவும்.


நீர் தேங்குவதைத் தவிர்க்கவும்:


தண்ணீர் தேங்குவதற்கான சாத்தியக்கூறுகளை நீக்கி, கொசுக்கள் பெருகும் இடங்களைத் தடுக்க சுத்தமான சூழலை பராமரிக்கவும்.


தூய்மையான சுற்றதை பராமரிக்கவும்:


ஈரமான பகுதிகளிலிருந்து விலகி இருங்கள், ஏனெனில் அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை. ஒவ்வொரு முறையும் நீங்கள் மழைக்கால நடைப்பயணத்திலிருந்து திரும்பும்போது, உங்கள் கால்களைக் கழுவுங்கள்.