மனிதர்களாகிய நாம் செய்யக் கூடிய மிகவும் இழிவான செயல்களில் முதல் பத்து இடங்களுக்குள் குளிக்கும்போது சிறுநீர் கழிப்பதும் இருக்கும். குளத்தில் நீச்சலடிக்கும்போது சிறுநீர் கழிப்பதை விட இது காமெடியான செயல் இல்லை என்றாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இது கொஞ்சம் தலையைச் சொறிய வைக்கும் செயல்தான்.
ஆனால் குளிக்கும்போது சிறுநீர் கழிப்பது நல்லது எனச் சொன்னால் நம்புவீர்களா?. அதுவும் மழையில் நனையும்போது சிறுநீர் கழிப்பது கூடுதலாக நல்லது எனச் சொன்னால்... “அபச்சாரம்..அபச்சாரம்” என காதை மூடிக்கொண்டு ஓடுவதற்கு முன்பு அதற்கான காரணத்தை நாங்கள் சொல்லிவிடுகிறோம்.
1. உங்கள் சிறுநீரில் குறைந்த அளவு பாக்டீரியாக்களே உள்ளன
உங்கள் சிறுநீரில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தாலும். அது பெரிய அளவிலான தொற்றை உண்டாக்குவதில்லை. ஒருவேளை உங்கள் காலில் பாதத்தில் வெட்டுக்காயம் இருந்தால் கூட சிறுநீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் அந்த காயத்தை பாதிக்காது, அதனால் நோய் உண்டாக்காது.
2. உங்கள் சிறுநீரில் பெரும்பாலும் தண்ணீர்தான் உள்ளது
உடலில் எவ்வித நோயும் இல்லாத ஆரோக்கியமான நபரின் சிறுநீரில் நீர்தான் அதிகம் உள்ளது. அதுதவிர எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் யூரியா ஆகியவையும் உள்ளது. இது உங்கள் உடலே வெளியேற்றும் கழிவு. அதில் சுகாதாரமற்ற வேறு எதுவும் இல்லை.
3. சிறுநீர் மட்டுமல்ல, மாதவிடாய் இரத்தம் மற்றும் மலம் ஆகியவற்றையும் கழுவுகிறீர்கள்
நீங்கள் குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல மலம் மாதவிடாய் என அத்தனையையும் வெளியேற்றுகிறீர்கள். உதாரணத்துக்கு ஆசனவாய் பகுதியில் ஒட்டியுள்ள மலம், அல்லது மாதவிடாய் காலத்தில் பிறப்புறுப்புப் பகுதியில் எஞ்சியிருக்கும் ரத்தம் ஆகியவற்றையும் நாம் சுத்தம் செய்கிறோம்.இதையெல்லாம் செய்யும் நாம் சிறுநீர் வெளியேற்றுவதை ஏன் நிறுத்த வேண்டும்?
4. ஷவரில் சிறுநீர் கழிப்பது சுற்றுச்சூழலுக்கு நல்லது
நீங்கள் பயன்படுத்தும் ஃப்ளஷ் முறையைப் பொறுத்து, ஒவ்வொரு ஃப்ளஷிலும் நீங்கள் ஆறு முதல் 12 லிட்டர் தண்ணீரை வீணடிக்கிறீர்கள். இப்போது, நீங்கள் குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும்போது - நீங்கள் ஷவர்-ஹெட் அல்லது வாளியைப் பயன்படுத்தினால் இவ்வளவு லிட்டர் தண்ணீரை நீங்கள் சேமிக்கிறீர்கள்.
5. உங்கள் சிறுநீரை நீங்கள் மிதித்துவிடுவீர்கள் என்கிற தயக்கமா?
உங்கள் சிறுநீரில் நீங்களே கால் வைத்துவிடுவீர்கள் என்கிற தயக்கம் வேண்டாம். ஏனென்றால் நீங்கள் குளிக்கும் நீர் உங்கள் சிறுநீரை அவ்வளவு வேகமாகக் கடத்திச் செல்லும். ஒருவேளை நீங்கள் பாத் டப்பில் குளிப்பவராக இருந்தால் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பு உண்டு. அந்த சமயத்தில் பாத் டப்பில் சாதாரண சோப் வாட்டர் கொண்டு ட்ரைன் செய்வதே போதுமானது.