மதுரை மண் வாசத்துடன், வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் ஆடுகளம். இந்த திரைப்படம் கோலிவுட்டின் சூப்பர் டூப்பர் வெற்றிக்கூட்டணியான வெற்றிமாறன் மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்தது. சேவல் சண்டை போட்டிகள் அதனை சுற்றி நடக்கு அரசியலை மையமாக வைத்து உருவான படத்தை மதுரையை சுற்றி எடுத்திருந்தார் இயக்குநர் வெற்றிமாறன். ஆடுகளம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஆடுகளம் வீரமணி என்பவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் சேவல் வளார்ப்பு மற்றும் சேவல் சண்டை உள்ளிட்ட வேலைகளை முழு நேரமாக செய்து வருகிறார். ஆடுகளம் படம் உருவானபோது , அங்கு நடந்த சில சுவாரஸ்ய விஷயங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார் வீரமணி.
எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் கதையை மையமாக வைத்து அதே தலைப்பில் உருவாகிவரும் திரைப்படம்தான் வாடிவாசல். முன்னதாக ஆடுகளம் படத்தில் சேவல் சண்டை என்னும் பாரம்பரிய விளையாட்டை கையில் எடுத்த இயக்குநர் வெற்றிமாறன் இம்முறை தமிழர்களின் வீரத்தினை பரைசாற்றும் மாடுபிடி விளையாட்டை கதைக்களமாக எடுத்துள்ளார். இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க அவருடன் காளை ஒன்றும் நடித்து வருகிறது. அந்த காளையை சூர்யாவே சொந்தமாகி வாங்கி வளர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரை மண் சார்ந்த ஆடுகளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து , அதே பாணியில் உருவாகி வரும் வாடிவாசல் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. சமீபத்தில் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் வாடிவாசல் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.