லாலிபாப்பை விரும்பி சாப்பிடாத குழைந்தகள் குறைவு… இங்கு சென்றாலும் லாலிபாப் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளையும், அதை சாப்பிட்டால் பூச்சிப்பல் வரும் என்று மறுக்கும் பெற்றோர்களையும் பார்க்கலாம். எல்லா மனிதர்களும் முன்னாள் குழந்தைகள் தான் என்னும் பட்சத்தில் பெரியவர்கள் கூட லாலிபாப் விரும்புவார்கள். அந்த டிரிக்கை பயன்படுத்தி மருத்துவ டெஸ்ட் செய்யும் முறை தற்போது பிரபலம் ஆகி வருகிறது.


லாலிபாப் கொண்டு உமிழ் நீர் சேகரிக்கும் முறை


கொரோனா சமயத்தில் கிட்டத்தட்ட நாம் அனைவருமே ஒரே ஒரு முறையாவது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்போம். வாயில் தொண்டை வரை குச்சியை விடுவது பலருக்கும் அச்சத்தையும், கூச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம். அது போக எச்சிலை சேகரிக்க பயன்படுத்தப்படும் பழைய முறைகள் எல்லாமே பலருக்கு அசௌகர்யம் ஏற்படுத்தும் விஷயம் தான். நாமாக எச்சிலை ஒரு சிறிய குடுவைக்குள் துப்பி சேகரிக்க வேண்டி இருக்கும். இவற்றை எல்லாம் தவிர்க்கும் ஒரு முறைதான் லாலிபாப் மூலம் எச்சிலை சேகரிக்கும் முறை.


லாலிபாப் அடிப்படையிலான உமிழ்நீர் சேகரிப்பு அமைப்பு மூலம் பெரியவர்களிடமிருந்தும் கூட பாக்டீரியாவைப் சேகரிக்க முடியும். அதோடு சேகரித்ததை ஒரு வருடம் வரை நிலையாக வைத்திருக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் கலந்து கொண்டவர்கள் பலர் பாரம்பரிய எச்சில் சேகரிப்பு முறைகளை விட குச்சி மிட்டாய் மூலம் சேகரிக்கும் முறையையே விரும்புவதாக தகவல் கிடைத்துளளன.



சுவாரஸ்யமான முறை


சில ஆய்வுகளுக்கு அதிக அளவிலான எச்சில் தேவைப்படும், அதனை கேட்டு வாங்குவது என்பது மருத்துவர்களுக்கும் கொஞ்சம் சிரமமான காரியமாக இருந்து வந்தது. ஆனால் இந்த சேகரிப்பு முறை, தானாகவே நிறைய எச்சிலை சேகரிப்பதால் இன்னும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் ஒரு லாலிபாப் சாப்பிடுவது என்பது அனைவருக்குமே எளிதான காரியம் என்பதால், பலரும் இதனை விரும்புகிறார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் உமிழ் நீர் சேகரிப்பு முறையை சுவாரஸ்யமாக மாற்ற முயற்சி செய்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்: Vegetables Price: தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம்.. இரட்டை சதத்தில் இஞ்சி, பட்டாணி, சின்ன வெங்காயம்.. மற்ற காய்கறிகளின் விலை பட்டியல் இதோ..


எப்படி செயல்படுகிறது?


இந்த தட்டையான முனையில் ஐசோமால்ட் மிட்டாய் கொண்டு மூடப்பட்டிருக்கும். அதனை சாப்பிடும்போது உமிழ்நீர் எளிதில் பள்ளத்தில் பாயும். முன்பு, தொண்டை அழற்சிக்கு காரணமான பாக்டீரியாவை இந்த புதிய சாதனம் பிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வக சோதனைகளில் காட்டியுள்ளனர். இப்போது, மற்ற இயற்கையாக நிகழும் பாக்டீரியாக்களை பிடிக்க விரும்பி அதற்கேற்ப தயார் செய்துள்ளனர்.  



ஆராய்ச்சியில் கிடைத்த கண்டுபிடிப்புகள்


ஆராய்ச்சியாளர்கள் CandyCollect மற்றும் இரண்டு வழக்கமான உமிழ்நீர் மாதிரி கருவிகளை 28 வயதுவந்த தன்னார்வலர்களுக்கு அனுப்பினர், அவர்கள் அவற்றைப் பயன்படுத்தி, சில கணக்கெடுப்பு கேள்விகளுக்கு பதிலளித்தனர், பின்னர் சாதனங்களை மீண்டும் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் மாதிரிகளை நீக்கி, பின்னர் qPCR ஐப் பயன்படுத்தி ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் மற்றும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் பாக்டீரியாவை அளவிட்டனர். வழக்கமான முறைகளில் எந்த பாக்டீரியாவை எடுக்க இலக்காக கொள்ளப்படுகிறதோ அதை மட்டும் கண்டறியும் நிலையில், 'Candy Collect' 100 சதவீதத்தையும் கண்டறிந்தது. கூடுதலாக, பங்கேற்பாளர்கள் பலர், மிட்டாய்கள் மூலம் எடுப்பது, "மிகவும் சுகாதாரமானது" என்றும் "அருவருப்பு குறைவானது" என்றும் ஒப்புக்கொண்டனர்.