ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில், இந்தியாவில் குடல் புழுக்கள், அவற்றின் வகைகள், வளரும் குழந்தைகளில் அவற்றின் தடுப்பு நுட்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு மண்ணால் பரவும் ஹெல்மின்த்ஸ் (STH) முழுவதுமாக ஒழிக்கப்படுவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய குடற்புழு நீக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. 


தற்போது குழந்தைகளுக்கு வரும் குடற்புழுக்களுக்கான  காரணம் மற்றும் தீர்வு என்ன? என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் ராஜ்மோகான் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இனிப்புகள் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் வருவதில்லை. இரண்டு காரணங்களுக்காக வருகிறது. ஒன்று தெருவில் அல்லது வேறொரு இடத்திலோ செருப்புகள் அணியாமல் சென்றால் கால்களின் இடுக்குகளின் வழியே, ஆரம்ப நிலையில் இருக்கும் குடற்புழுக்கள் உள்ளே நுழைந்து அவை ரத்தத்திற்குள் சென்று நுரையீரல் வரைக்கும் சென்று மறுபடியும் உணவு பாதைக்குள் வந்து அது வழியாக குடற்புழுக்கள் வருகிறது. இது கால் வழியாக வரும் குடற்புழுக்கள் ஆகும். 


மற்றொரு வகை. காய்கறிகள், முட்டைகள் சரியாக வேகவைக்காமல் சாப்பிட்டால் அது வகையாக வரும். இந்த இரண்டு வழியாக குழந்தைகளில் குடல்களுக்கு சென்று புழுக்கள் வளர ஆரம்பிக்கும்” என்று கூறினார்.


குழந்தைகளுக்கு பூச்சி மருந்து எந்த வயதில் கொடுக்க வேண்டும்


ஒரு வயதை தாண்டிய அனைத்து குழந்தைகளுக்கும் பூச்சி மருந்தை கொடுக்கலாம். அரசாங்கமே வருடத்திற்கு இரண்டு முறை இதற்கான மருந்தை கொடுக்கிறது. மேலும், வெளியில் குழந்தைகள் நல மருத்துவரை அணுகி 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்தை கொடுக்கலாம். 1 வயது முதல் 2 வயது வரை பாதி டோஸ் கொடுக்கலாம். 2 வயதுக்கு ஒரே அளவில் கொடுக்கலாம். ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே கொடுக்க வேண்டும். பூச்சி மருந்து கொடுத்தும் புழுக்கள் நீங்கவில்லை என்றால் மருத்துவரை அணுகி அவர்கள் கூறுவது பூச்சி மருந்தை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி குடற்புழுக்கள் பிரச்சனை ஏற்பட்டால், குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பூச்சி மருந்தை சாப்பிட வேண்டும். பெரியவங்களுக்கு மாத்திரையாகவும், குழந்தைகளுக்கு சிரப்பாகவும் கொடுக்க வேண்டும்.


குடற்புழுக்களினால் ஏற்படும் தொந்தரவுகள்


குழந்தைகளின் சிறுகுடலில் குடற்புழுக்கள் ஆழமாக பதிந்து அதில் உள்ள இருக்க ரத்தத்தை உறிஞ்ச தொடங்கும். இதனால், குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படும். அதனைத்தொடர்ந்து, குடற்பகுதியில் உள்ள சத்துக்களை உறிஞ்ச தொடங்கிவிடும். இதனால், குழந்தைகள் எவ்வளவு சாப்பிட்டாலும், அவர்களின் உடலில் ரத்தம் இருக்காது. இதனால், ரத்த சோகை, அனீமியா ஏற்படும். இதன்மூலம், குழந்தைகளுக்கு சரியான பசி ஏற்படாது. மந்தமாக இருப்பார்கள். படிப்பில் ஆர்வம் குறையும். ஆசன வாயிலில் அரிப்பு ஏற்படும், வெள்ள தழும்புகள் தோன்றும் இந்த மாதிரி அறிகுறிகள் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண