ஆப்பிரிக்காவில், குறிப்பாக காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் அதன் அண்டை நாடுகளில் குரங்கு அம்மை தொற்றானது சமீபத்தில் அதிகரித்து வருவதையொட்டி,  உலக சுகாதார அமைப்பு,  பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு வெளியேயும் தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாகவும், ஆப்பிரிக்காவில் தங்கியிருந்தபோது அந்த நபர் தொற்றுநோயைப் பெற்றதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.


குரங்கு அம்மை நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது, இதன் அறிகுறிகள் காய்ச்சலைப் போன்றது, இதனால் ஏற்படும் தோல் புண்கள் மிகவும் ஆபத்தானவை, பாதிக்கப்பட்ட 100 பேர்களில் நான்கு பேர் மரணிப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.


இந்நிலையில் WHO ஆல் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையில்,  சில முக்கிய கேள்விகளுக்கான பதில்கள் இங்கே உள்ளன.




1. குரங்கு அம்மை என்றால் என்ன, அது எங்கிருந்து வந்தது?


குரங்கு அம்மை, ஆர்த்தோபாக்ஸ் என்னும் வைரஸால் ஏற்படும் ஒரு நோயாகும். இது முதன்முதலில் 1970-ஆம் ஆண்டில் காங்கோவில் மனிதர்களிடம் கண்டறியப்பட்டது. இந்த நோயானது மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த நோய் 2022 இல் உலகளாவிய பரவலை ஏற்படுத்தியதையடுத்து உலகளாவிய கவனத்தைப் பெற்றது.


2.அறிகுறிகள் என்ன?


தோல்களில் புண்கள், தொண்டை புண், காய்ச்சல், தலைவலி மற்றும் தசைவலி, முதுகுவலி, வீங்கிய நிணநீர் கணுக்கள் மற்றும் உடலில் ஆற்றல் குறைந்த உணர்வு ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். சில நோயாளிகள் காட்டும் முதல் அறிகுறி தோல்களில் புண்கள்.


ஆனால் வெவ்வேறு அறிகுறிகளும் முதலில் தோன்றும். தோல்களில் புண்களானது "திரவத்தால் நிரப்பப்பட்ட கொப்புளமாக" மாறும், அது அரிப்பு அல்லது வலியை ஏற்படுத்தும். இந்த தோல் புண்கள், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை, உடலில் எங்கும் தோன்றும் ஆனால் பெரும்பாலும் உள்ளங்கைகள் மற்றும் கால்களில் தோன்றும்.


3.எப்படி பரவுகிறது?


குரங்கு அம்மையை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் அசுத்தமான பொருட்கள், பாதிக்கப்பட்ட நபர் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு மூலம் பரவுகிறது. தொற்று பாதிக்கப்படவரின் புண்கள், நேருக்கு நேர் தொடர்புகள் (பேசும், சுவாசம்), தொடுதல், உடலுறவு ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. வைரசானது உடைந்த தோலின் மேற்பரப்புகள் அல்லது சுவாசக் குழாய் வழியாக உடலுக்குள் நுழைகிறது.


3.பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டது ஏன்?


இதுகுறித்து WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளதாவது,  கிழக்கு காங்கோ பகுதிகள் மற்றும் அதன் அண்டை நாடுகளில் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் பொது சுகாதார அவசரநிலை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.  


4.குரங்கு அம்மை பரவலின் புதியது என்ன?


தற்போதைய பரவிலில் குறிப்பாக கிளேட் 1 பி என்ற புதிய திரிவும்  இருக்கிறது. இது முதன்மையாக பாலியல் உறவு மூலம் பரவுகிறது., இதற்கு முன் இந்த தொற்று கண்டறியப்படாத நாடுகளான புருண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் இந்த திரிபு கண்டறியப்பட்டுள்ளன.


5.ஆப்பிரிக்காவில் தற்போதைய நிலைமை எப்படி உள்ளது?


ஒரு தசாப்தத்திற்கும் மேலாக DRC இல் Mpox வழக்குகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும், 15,600 க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் 537 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது. பிராந்தியத்தில் புதிய நாடுகளுக்கு நோய் பரவுவது நிலைமையை குறிப்பாக கவலையடையச் செய்கிறது.


6.பாதிப்பு எவ்வளவு?


காங்கோ நாட்டில் குரங்கம்மை பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும், 15,600 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மற்றும் 537 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது. பிராந்தியத்தில் புதிய நாடுகளுக்கு நோய் பரவுவதும் அதிகரித்து வருகிறது.


7.தடுப்பூசிகள் இருக்கிறதா?


தடுப்பூசிகள் இருக்கின்றன, WHO பரிந்துரைத்த இரண்டு தடுப்பூசிகள் உள்ளன. UNICEF போன்ற ஏஜென்சிகள் தடுப்பூசிகள் விரைவாக கிடைக்கப்பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.