காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் கலப்பு குழு பிரிவில் (நேற்று) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் மலேசியாவிடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த இந்திய பேட்மிண்டன் அணி வெள்ளி பதக்கம் வென்றது. 










முடிவுகள் :


 



  • ஆடவர் இரட்டையர் பிரிவு : சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி 18-21, 15-21 என டெங் ஃபோங் ஆரோன் சியா மற்றும் வூய் யிக் சோவிடம் தோற்றனர்.

  • பெண்கள் ஒற்றையர் பிரிவு : பி வி சிந்து 22-20, 21-17 என்ற செட் கணக்கில் கோ ஜின் வெய்யை தோற்கடித்தார்.

  • ஆடவர் ஒற்றையர் பிரிவு : கிடாம்பி ஸ்ரீகாந்த் 19-21, 21-6, 16-21 என்ற செட் கணக்கில் NG Tze Yong-யிடம் தோல்வியடைந்தார்.

  • மகளிர் இரட்டையர் பிரிவு : ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் 18-21, 17-21 என்ற செட் கணக்கில் தினா முரளிதரன் மற்றும் டான் கூங் லெ பேர்லியிடம் தோற்றனர்.

  • கலப்பு இரட்டையர் பிரிவு : சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் அஷ்வினி பொன்னப்பா -  டான் கியான் மெங் மற்றும் லாய் பெய் ஜிங் எதிரான போட்டியில் விளையாடவில்லை. 


முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, மலேசியாவின் டெங் ஃபோங் ஆரோன் சியா மற்றும் வூய் யிக் ஆகியோருக்கு எதிராக கடினமான முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தனர். இதன்மூலம்.நெக் டூ நெக் ஆட்டத்தில் மலேசியா ஜோடி  21-18, 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றது.


இரண்டாவது ஆட்டத்தில் பிவி சிந்து ஜின் வெய் கோவை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் ஆக்ரோஷமாக விளையாடி 22-20 என்ற கணக்கில் மலேசியாவின் ஜின் வெய் கோவை வீழ்த்தினார்.






மூன்றாவது ஆட்டத்தில் தொடக்க ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 19-21 என்ற கணக்கில் மலேசியாவின் Ng Tze Yong-க்கு எதிராக தோல்வியடைந்தார். ஒரு மணி நேரம் ஆறு நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் மலேசிய வீரர் 21-19, 6-21, 21-16 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்க்கு எதிராக வெற்றி பெற்றார் . ஆட்டத்தின் முடிவில் மலேசியா 2-1 என முன்னிலை பெற்றது.




போட்டியின் நான்காவது போட்டியில் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் முரளிதரன் தினா மற்றும் கூங் லெ பேர்லி டான் ஆகியோரை எதிர்கொண்டனர். முதல் ஆட்டத்தில் இந்திய ஜோடி 18-21 என தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் மலேசிய ஜோடி 21-17 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை வென்றது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண