தட்டம்மை தடுப்பூசி போட்டு கொண்ட குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் குறைவாக உள்ளது என புனேவில் உள்ள மருத்துவ கல்லூரி நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. புனேவைச் சேர்ந்த பிஜே மருத்துவக் கல்லூரி நடத்திய ஆராய்ச்சில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. அதாவது தட்டம்மை தடுப்பூசி போட்டு கொண்ட குழந்தைகளில் 87.5% கொரோனா வராமல் பாதுகாக்க முடியும் . இது நீண்ட கால பாதுகாப்பாக இருக்கும்.
தடுப்பூசி போட்டு கொண்ட குழந்தைகள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகள் என இரண்டு குழுவாக பிரித்து ஆராய்ச்சியில் ஈடுபடுத்தினர். 1- 17 வயதுக்குட்பட்ட 500க்கும் அதிகமான குழந்தைகள் கொரோனா தோற்று பாதிப்புக்குட்பட்டவர்களை தேர்ந்தெடுத்தனர். இதில் இரண்டு பிரித்து தட்டம்மை தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகளையும், தட்டம்மை தடுப்பூசி போடாதவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறிகள் என பிரித்து நடத்திய ஆய்வில் 87.5 சதவீதம் தட்டம்மை தடுப்பூசி போட்டவர்கள் கொரோனா அறிகுறிகளால் குறைவாக பாதிப்புக்கு உள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆராய்ச்சியின் முடிவில் SARS-CoV-2 இன் அமினோ அமில வரிசை ருபெல்லா வைரஸைப் போலவே கிட்டத்தட்ட 30 சதவிகிதம் இருப்பதால், ஆய்வுக்கான எம்.எம்.ஆர் (தட்டம்மை-மம்ப்ஸ்-ரூபெல்லா) தடுப்பூசிகளில் நாங்கள் கவனம் செலுத்தினோம். ஸ்பைக் ( S) SARS-CoV-2 இன் புரதமும் தட்டம்மை வைரஸின் ஹேமக்ளூட்டினின் புரதத்தைப் போன்றது. அதனால்தான் நாங்கள் ஆய்வு செய்தோம், முடிவுகள் நம்பிக்கைக்குரியவையாக இருந்தது "என்று ஆய்வின் முதன்மை ஆய்வாளரான டாக்டர் நிலேஷ் குஜார் இந்தியாவுக்கு தெரிவித்தார். இது போன்ற ஆய்வுகள் முதன் முதலாக இந்தியாவில் நடந்தது.
இந்த கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்த ஆய்வு கொஞ்சம் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. கொரோனா நோய் தொற்று வந்தால் பெரியவர்களை படாதபாடு படும் நிலையில், குழந்தைகள் என்ன நிலைக்கு ஆளாவார்கள் என்ற அச்சம் அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்க தான் செய்யும். மேலும் குழந்தைகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி அறிமுக படுத்தப்படும். குழந்தைகளுக்கான தடுப்பூசி மூன்றாம் கட்ட ஆய்வில் உள்ளது. இன்னும் மாதங்களில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி கிடைக்கும்.
தட்டம்மை தடுப்பூசி போட்டு இருக்கோம். இதுக்காக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று இல்லை. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து கொள்ள வேண்டும். குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். 5வயதுக்குட்பட்டவர்களுக்கு மாஸ்க் வேண்டாம். 5 வயதுக்கு மேல் இருப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் வேண்டும். மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்குமா என்கிற கவலை பெற்றோர்களிடத்தில் இருந்த நிலையில், இந்த ஆய்வு முடிவு பலருக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது.