உடல் எடை குறைப்புக்குப் பின்னர் பலருக்கும் முடி உதிர்வதாக பலரும் புகார் தெரிவிக்கலாம். அதற்குக் காரணம் வெயிட் லாஸ் தெரபியின் போது பின்பற்றப்படும் மோசமான டயட். இதனால் முடி உதிர்தல் மட்டுமல்ல தோல் சுருங்குதல், சோர்வான தோற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். 


முடி உதிரக் காரணம் என்ன?


அதிகமாக முடி உதிரக் காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. அன்றாடம் 50 முதல் 100 முடி வரை உதிர்தல் இயல்பானது. ஆனால் அதையும் தாண்டி முடி உதிர்தல் என்பது கவனிக்க வேண்டியது. இணையத்தில் முடி உதிர்தலை தவிர்க்க பல்வேறுவிதமான டிப்ஸ் கொடுக்கப்படலாம். ஊட்டச்சத்து நிபுணர் மொஹிதா சரியான காரணங்களை முன்வைக்கிறார். அவரின் கூற்றின்படி, உடல் எடை குறைப்புக்காக பலரும் அரிசி, ரொட்டி, உருளைக்கிழக்கு, நெய், வாழை என சத்தான உணவுகளை தவிர்த்துவிடுவர். இதுவே ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். இந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் முடி உதிரும்.


முடி உதிர்வதைத் தவிர்க்க 5 டயட் டிப்ஸ் உங்களுக்காக:


1. போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் அருந்தினால் அது உடலில் இருந்து நச்சை வெளியேற்றும். தண்ணீர் அருந்துதல் உடல் எடை குறைப்புக்கும் உதவும். ரத்த சுழற்சியை சீராக்கும். இதனால் முடி வலுவடையும்.


2. புரதம் சேர்க்கவும்: உங்கள் உணவில் புரதச் சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். புரதம் உடல் எடை குறைப்புக்கு மட்டுமல்ல கெராடின் உற்பத்திக்கும் அவசியமானது. 


3. பருவகாலத்திற்கு ஏற்ப பழங்கள், காய்கறிகளை உண்ணுங்கள். கீரை, பச்சைக் காய்கறிகளை உண்ணுங்கள். இது முழு ஆரோக்கியத்திற்கும் சிறந்த மருந்து.


4. குவிக் வெயிட் லாஸ்: உடல் எடை குறைப்பு என்பது ஒரு பயணம். அதற்கு நேரமும் பொறுமையும் அர்ப்பணிப்பும் அவசியம். அவ்வாறு எடை குறைக்க முயற்சி செய்தால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாது.


5. சிறு தீனி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்: எண்ணெய், கலோரிக்கள் அதிகமாக இருக்கும் உணவைத் தவிர்த்தல் நல்லது. அடிக்கடி ட்ரான்ஸ் ஃபேட் இருக்கும் உணவை அதிகமாக உட்கொண்டால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். கூடவே முடி உதிரும், உடல் எடையும் கூடும்.


எதை சாப்பிட்டால் சத்து கிடைக்கும், எந்த உணவில் எவ்வளவு ஊட்டச்சத்துகள் இருக்கிறது, எதை எப்போது சாப்பிட  வேண்டும்,என கூகுளிடம் கேட்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க என செய்ய வேண்டும் என கேள்விகள் பலரிடம் வர  தொடங்கியுள்ளது. அதாவது, கொரோனாவிற்கு பின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் மாறி உள்ளது. அந்த வரிசையில்,  உணவு எடுத்து கொள்வதில் பெரிய  மாற்றங்கள் நடக்கிறது என சொல்லலாம். உலர் பழங்கள் தினம் எடுத்து கொள்வதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைகிறது.