நம் தலைமுடி உதிர்வுக்கு என்ன காரணம்? தட்பவெப்பம், நமது உடல்நிலை, தலை வறட்சி என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதிக முடி உதிர்தல் ஊட்டச்சத்து குறைபாடுடன் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜியின்படி, ஒரு நாளைக்கு சுமார் 50-100 முடிகள் உதிர்வது இயல்பானது. இது முடி உதிர்தல் என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், முடி உதிர்வு நூற்றுக்கு மேல் இருக்கும்போது கவலைகொள்ள வேண்டியதாகிறது. முடி உதிர்தலுக்கான பல காரணங்களில் ஒன்று, ஊட்டச்சத்து குறைபாடு. ஊட்டச்சத்து குறைபாடு முடி ஆரோக்கியத்தை பாதிக்கிறது.இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான ஊட்டச்சத்து குறைபாடு டிப்ஸ்கள் நம்மை தவறாக வழிநடத்துபவையாக இருக்கின்றன. ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பெரும்பாலான மக்கள் விரைவாக உடல் எடையை குறைக்க முடிந்தவரை குறைவாக சாப்பிட முயற்சி செய்கிறார்கள்.எனவே, அவர்கள் தங்கள் உணவில் இருந்து அரிசி, ரொட்டி, உருளைக்கிழங்கு, நெய், வாழைப்பழம் போன்றவற்றை உணவு நிபுணரிடம் கூட ஆலோசிக்காமல் தவிர்க்கிறார்கள். இது ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது, நம் முடி ஆரோக்கியத்தையும் இது பாதிக்கிறது.
கெட்டோ, டிடாக்ஸ், இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் போன்ற உட்கொள்ளல் நமது கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துகிறது. "இதன் விளைவாக உடலுக்கு போதுமான மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது, இதனால் முடி உதிர்தல் ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். புரதத்தை இழப்பது கெரட்டின் உற்பத்தியை பாதிக்கிறது. ஊட்டச்சத்து இடைவெளி பெரும்பாலும் உடலில் உள்ள அமினோ அமிலத்தின் உள்ளடக்கத்தை பாதிக்கிறது. இந்த அமினோ அமிலங்கள் புரதத்தின் கட்டுமானத் தொகுதிகள் ஆகும், இது முடி வளர்ச்சிக்கு கெரட்டின் உற்பத்திக்கு அவசியம். எனவே, போதிய புரதம் இல்லாத குறைந்த கலோரி உணவை உட்கொள்ளும்போது அதிக முடி இழப்பு ஏற்படும்.
மேலும் கட்டுப்பாடான உணவு முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. உணவில் இரும்பு, துத்தநாகம், புரதம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அனைத்தும் முடி ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் குறைபாடு நேரடியாக முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. சில கூடுதல் பவுண்டுகளை குறைக்கும் அதே வேளையில், ஊட்டமளிக்கும், வலுவான முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
எடை இழப்பு மற்றும் தலைமுடி ஆரோக்கியம் இரண்டையும் மேம்படுத்தும் உணவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
1. நீரேற்றத்துடன் வைத்திருங்கள்: உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற போதுமான தண்ணீர் குடிப்பது முக்கியம். இது எடை இழப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, வலுவான முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
2. புரதத்தைச் சேர்க்கவும்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் உணவில் நல்ல அளவு புரதத்தைச் சேர்க்கவும். உங்கள் எடை இழப்புக்கு புரதம் ஏற்றது என்பது மட்டுமல்லாமல் முடி வேர்களில் கெரட்டின் உற்பத்திக்கு உதவுகிறது.
3. சீசனல் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்: கீரைகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.அவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
4. உடனடி எடைக்குறைப்பைத் தவிர்க்கவும்: உடல் எடையை குறைப்பது என்பது ஒரு தவம் போன்றது பொறுமையாக அடைய வேண்டிய இலக்கு. ஆனால் அதனை துரிதப்படுத்துவது உடலின் மெட்டபாலிஸத்தை பாதிக்கிறது.